அடேங்கப்பா 150 கோடியா.. இந்தியன் 2 படத்துக்காக இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கப் போறாரா கமல்?

சென்னை: பாலிவுட், டோலிவுட் நடிகர்களை விட அதிகளவில் 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கி வருகின்றனர் கோலிவுட் நடிகர்கள்.

ரஜினிகாந்த், விஜய், அஜித் வரிசையில் தற்போது கமல்ஹாசனும் 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகராக மாறி உள்ளார்.

ஆனால், மற்ற நடிகர்கள் அனைவரையும் ஒரேயடியாக ஓரங்கட்டி அதிக சம்பளம் வாங்கும் நடிகர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் என பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

30 கோடி தான்

30 கோடி தான்

விக்ரம் படம் வெளியாவதற்கு முன்னர் வரை கமல்ஹாசனின் சம்பளம் வெறும் 30 கோடி தான் என்கின்றனர். ஆனால், கமல் தயாரித்து நடித்த விக்ரம் படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி கோலிவுட்டுக்கு மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த நிலையில், ராக்கெட் வேகத்தில் கமலின் சம்பளம் உயர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

100 கோடி நாயகர்கள்

100 கோடி நாயகர்கள்

தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் தான் முதன் முதலில் 100 கோடி சம்பளம் வாங்கிய ஹீரோவாக மாறினார். அவரை தொடர்ந்து நடிகர் விஜய் அதன் பிறகு தற்போது நடிகர் அஜித்தும் 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களாக உள்ளனர். அவர்களின் படங்களின் வசூல் குறைந்தபட்சம் 200 கோடியை கடந்து வருகிறது. இந்நிலையில், அந்த பட்டியலில் அதிரடியாக இடம்பிடித்துள்ளார் கமல்.

இந்தியன் 2வுக்கு 150 கோடியா

இந்தியன் 2வுக்கு 150 கோடியா

விக்ரம் படம் 450 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த நிலையில், இந்தியன் 2 படத்துக்கு லைகா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து கமலுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப் போவதாக சினிமா வட்டாரத்தில் பெரும் பேச்சு நிலவி வருகிறது. இது மட்டும் உண்மையாக இருந்தால் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் கமலாகத்தான் இருப்பார்.

வாய்ப்பு இருக்கா

வாய்ப்பு இருக்கா

கமல்ஹாசனுக்கு இந்த அளவுக்கு சம்பளம் கொடுக்க வாய்ப்பிருக்கா? என்கிற கேள்விக்கு இந்தியன் 2 கண்டிப்பாக 1000 கோடி வசூலை குறிவைத்து உருவாகி வருகிறது என்றும் விக்ரம் வெற்றியால் ஓவர்சீஸ் மார்க்கெட்டில் கமல்ஹாசனின் மார்க்கெட் எங்கேயோ போய்விட்டது. கண்டிப்பாக இந்த சம்பளத்தை அவருக்கு தாராளமாக கொடுப்பார்கள் என்கின்றனர். ஆனால், இதுதொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. மற்ற நடிகர்கள் சம்பளம் போலவே இதுவும் தகவலாகவே பரவி வருகிறது.

பிக் பாஸ் சம்பளம்

பிக் பாஸ் சம்பளம்

இது தவிர பிக் பாஸ் சீசன் 6-ஐ தொகுத்து வழங்க 100 கோடி வரை நடிகர் கமல்ஹாசனுக்கு சம்பளம் தரப் போவதாகவும் பரபரப்பு தகவல்கள் பறந்து வருகின்றன. பாலிவுட்டில் இந்தி பிக் பாஸை தொகுத்து வழங்க நடிகர் சல்மான் கானுக்கு 350 கோடி வரை சம்பளம் கொடுப்பதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X