twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வசூல் ராஜா இப்போ டபுள் டாக்டர்.. கமலுக்கு டாக்டர் பட்டம் வழங்கிய ஒடிசா முதல்வர்!

    |

    Recommended Video

    Kamal Hassan 2nd Honorary doctorate from Centurion University

    ஒடிசா: கலைத்துறையில் 60 ஆண்டுகாலம் பயணம் செய்த மகத்தான சாதனைக்கு சொந்தக்காரரான நடிகர் கமல்ஹாசனுக்கு இன்னொரு மணி மகுடமாக கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

    செஞ்சுரியன் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள இந்த கெளரவ டாக்டர் பட்டத்தை நடிகர் கமல்ஹாசனுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வழங்கியுள்ளார்.

    உலக நாயகன் கமல்ஹாசன் இரண்டாவது முறையாக கெளரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளதை திரையுலக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    கூப்பிடவே இல்லையாம்.. கமல் 60ல் ஆப்சென்ட்டானதற்கு காரணம் இதுதானாம்.. அப்செட்டான பிரபல ஹீரோ!கூப்பிடவே இல்லையாம்.. கமல் 60ல் ஆப்சென்ட்டானதற்கு காரணம் இதுதானாம்.. அப்செட்டான பிரபல ஹீரோ!

    டபுள் டாக்டர்

    வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் ஆள்மாறாட்டம் செய்து டாக்டராக நடித்த நடிகர் கமல்ஹாசனுக்கு தற்போது ஒடிசா முதல்வர் கையால், கெளரவ டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2005ம் ஆண்டு, சத்யபாமா பல்கலைக்கழகம் நடிகர் கமல்ஹாசனுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    கமல் 60

    கமல் 60

    தனது 5வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் நடிக்க வந்த நடிகர் கமல்ஹாசன், தனது 65 வயதில், 60 ஆண்டுகள் சினிமா துறையில் நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும், நடன ஆசிரியராகவும், பாடலாசிரியராகவும், பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து உலக நாயகனாக உயர்ந்துள்ளதை பாராட்டி கடந்த ஞாயிறன்று திரைப்பிரபலங்கள் புடைசூழ ‘உங்கள் நான்' எனும் மாபெரும் விழா நடத்தப்பட்டது.

    அரசியல் அறிவுரை

    சினிமா மற்றும் அரசியல் என இரட்டை குதிரைகளில் சவாரி செய்து வரும் இந்த சகலகலா வல்லவன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிடம், தனது மக்கள் நீதி மய்யத்திற்கான அரசியல் அறிவுரைகளையும் கேட்டுத் தெரிந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பட்டாம்பூச்சி பூங்கா

    ஒடிசாவின் புவனேஷ்வரில் உள்ள செஞ்சுரியன் பல்கலைக்கழகம் நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால கலை சேவையை பாராட்டி கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் சார்பில், அந்த பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நலனுக்காக பட்டாம்பூச்சி பூங்கா ஒன்றை கமல் நிறுவியுள்ளார்.

    English summary
    kamalhaasan receiving all the love & learnings from Odisha CM Naveen Patnaik, and receiving his honorary doctorate from the Centurion University.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X