நான் பேசினது தப்புன்னு பிரஸ்ல சொல்லு: கமலிடம் கூறிய கருணாநிதி!

கலைஞருக்கும் கமல்ஹாசனுக்கும் உள்ள நெருக்கம்.

சென்னை: தனக்கும் கலைஞர் மு.கருணாநிதிக்கும் உள்ள நெருக்கம் பற்றி கூறியுள்ளார் கமல்ஹாசன்.

தமிழ் சினிமாவுக்கு அதிக தேசிய விருதுகள் கிடைத்த காலகட்டத்தில் கருணாநிதி தலைமைதாங்கும் ஒரு விருது விழாவை ஏற்பாடு செய்துள்ளார் கமல் ஹாசன்.

Kamal Haasan relationship with Karunanidhi

அந்த விழாவில் பங்கேற்று தேசிய விருதுபெற்ற திரைப்பட கலைஞர்களையும், இயக்குனர்களையும் கலைஞர் பாராட்டியுள்ளார். ஆனால் "ஒரே ஒரு கிராமத்திலே" என்ற படத்தின் இயக்குனர் ஜோதி பாண்டியனுக்கு மட்டும் விருது கொடுக்க மாட்டேன் என கருணாநிதி திட்டவட்டமாகக் கூறிவிட்டாராம்.

காரணம் அப்படத்தில் பிராமணப் பெண்ணாக வரும் லட்சுமி, தன்னை ஒரு தலித் எனக் கூறி இட ஒதுக்கீட்டில் வேலை பெறுவதுபோல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இட ஒதுக்கீட்டுக்கு எதிரான படத்திற்கு நான் விருது கொடுக்க மாட்டேன் எனக் கூறிய கருணாநிதி, "பாலம் பழுதுபட்டிருக்குன்னு பைபாஸ் போட்டால், அதை ஏன் இப்போது போட்டீர்கள் என்று கேட்பதுபோல இப்படம் உள்ளது என உவமையோடு விமர்சித்திருக்கிறார்.

அதன்பிறகு பேசிய கமல்ஹாசன், பாலம் பழுது பார்க்கப்பட வேண்டும். அதற்கு நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் செய்யத் தயார், இப்போது பைபாஸ் போட்டாச்சு அது போதுமென்று விட முடியாது என அவருடைய பாணியில் பேசியிருக்கிறார்.

நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு போனபிறகு, உன்னை கடைசியில் பேசவிட்டால் இப்பட்டி பேசிட்டியே...நான் பேசினது தப்புன்னு பத்திரிகையாளர்கள் கிட்ட சொல்லிடு என்று சொல்லியிருக்கிறார். நான் சரியாகத்தான் பேசினேன், அது உங்களிடம் கற்றுக்கொண்டது என கமல் கூற, அப்படியா எனக் கேட்ட கருணாநிதிக்கு ஆமாங்கய்யா என பதிலளித்ததும் கோபமாக போனை கட் செய்துவிட்டாராம் அவர்.

பிறகு அருகில் இருந்தவர்களுக்கு போன் செய்து கோபித்துக்கொண்டாரா என கேட்டிருக்கிறார். மேடையில் பேசிவிட்டான், இனிமே தப்புன்னு சொல்லி பிரையோஜனமில்லை. நான் சொன்னது ரைட்டுன்னு வேற சொல்றான், அவனுக்கு இனிமேல் புத்தி சொல்ல முடியாது. போயிட்டு போறான்... எனக் கூறினாராம். அன்று நடந்த இதை அடுத்தடுத்த சந்திப்புகளிலும், விழாக்களிலும் பிறகு அவர் மனதில் வைத்துக்கொள்ளவே இல்லையாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X