100 நாட்களை கடந்த விக்ரம்.. கமல் வெளியிட்ட ஆடியோ.. என்ன சொல்லியிருக்காரு தெரியுமா?

சென்னை: கடந்த ஆண்டு தீபாவளி, இந்த ஆண்டு பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டுகளில் வெளியான முன்னணி நடிகர்களின் படங்கள் சொதப்பிய நிலையில், கோலிவுட்டை காப்பாற்றும் படமாக வெளியானது கமல்ஹாசனின் விக்ரம்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பரபரப்பான ஸ்க்ரீன் பிளே ரசிகர்களை தியேட்டர்களை நோக்கி நகர வைத்தது.

கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், சூர்யா, காயத்ரி, காளிதாஸ் ஜெயராம் என நட்சத்திர பட்டாளமும் அனிருத்தின் அட்டகாசமான பிஜிஎம் மற்றும் பாடல்களும் படத்தை இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்க உதவின.

100 நாள்

100 நாள்

சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் 3 நாட்கள் படம் ஓடினாலே 100 நாட்கள் ஓடும் வசூலை அந்த படம் குவித்து விடுகிறது என கேப்டன் ஆர்யா பேசியிருந்தார். முன்னணி நடிகர்களின் படங்களே 50 நாட்களை கூட தாண்ட முடியாத சோகம் நிலவி வரும் நிலையில், கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் 100 நாட்கள் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடியுள்ளது.

இன்னொரு கெடா விருந்தா

இன்னொரு கெடா விருந்தா

விக்ரம் திரைப்படம் 450 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த நிலையில், படக்குழுவினருக்கு கறி விருந்து போட்டிருந்தார் கமல்ஹாசன். இந்நிலையில், தற்போது பெஞ்ச்மார்க்கான 100 நாட்களை விக்ரம் படம் கடந்துள்ள நிலையில், இன்னொரு விருந்து கொடுப்பாரா? என படக்குழுவினரே ஜாலியாக பேசி வருகின்றனர்.

லோகேஷுக்கு கார், சூர்யாவுக்கு ரோலெக்ஸ்

லோகேஷுக்கு கார், சூர்யாவுக்கு ரோலெக்ஸ்

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அந்த படத்தை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கிய கமல்ஹாசன், அவரது டீமான 13 உதவி இயக்குநர்களுக்கு இரு சக்கர வாகனங்களையும் பரிசளித்தார். மேலும், ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்த சூர்யாவுக்கு தனது கையில் இருந்த ரோலெக்ஸ் கடிகாரத்தையே பரிசாக வழங்கினார் கமல்.

விக்ரம்னு அழைத்த ரஜினி

விக்ரம்னு அழைத்த ரஜினி

சமீபத்தில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் 'விக்ரம்' கமல் என்றே கமல்ஹாசனை அழைத்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 4 ஆண்டுகளுக்கு பிறகு கமல் படம் வந்தாலும், பாக்ஸ் ஒட்டுமொத்த பிரபலங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கமல் வெளியிட்ட ஆடியோ

கமல் வெளியிட்ட ஆடியோ

இந்நிலையில், விக்ரம் படம் 100 நாட்களை கடந்த நிலையில் அதனை முன்னிட்டு ஆடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கமல்ஹாசன், இந்த படத்தை இத்தனை நாட்கள் ஓடவைத்து பெரும் வெற்றியைத் தேடித் தந்த ரசிகர்களுக்கு மானசீக அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் இயக்குநர் லோகேஷுக்கு என் அன்பு முத்தங்கள் என பேசியுள்ளார் கமல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X