நாகேஷ் அய்யா... உம்மை நினைக்காத நாட்கள் மிகச்சிலவே.. மகா கலைஞனை மறக்காத உலக நாயகன்!

சென்னை: நகைச்சுவை நடிகர் நாகேஷின் பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன் நாகேஷை நினைக்காத நாட்கள் மிகச்சிலவே என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மறைந்த பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷின் 87வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

எம்.ஜி.ஆருக்கு பிறகு நாகேஷ் உடன் மிகவும் நெருக்கமாக பழகியது கமல்ஹாசன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகேஷ் அய்யா

நாகேஷ் அய்யா

"நாகேஷ் அய்யா... உம்மை நினைக்காத நாட்கள் மிகச்சிலவே. பல தலைமுறைகளை மகிழ்வித்த வித்தகர். அந்த ரசிகர் கூட்டத்தில் நானும் உட்படுவேன். நண்பனாய் மாறுவேடம் பூண்டு வந்த என் குருக்களில் அவரும் ஒருவர். என் கலை மரபணுவில் அவரும் வாழ்கிறார்." என கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் நாகேஷை மறக்காமல் நினைத்துள்ளார்.

தமிழ்நாட்டின் சார்லி சாப்ளின்

தமிழ்நாட்டின் சார்லி சாப்ளின்

"இந்த மாதிரி ஒரு நகைச்சுவை, சிந்தனை யோசிப்பு திறன், நடனம், குணசித்திரம் போன்ற அனைத்து விதமான திறமையான நடிகரை காண்பது சிரமம்... தமிழ்நாட்டின் சார்லி சாப்ளின் அவர்களே!!!" என கமல் ட்வீட்டுக்கு கீழே ஏகப்பட்ட ரசிகர்கள் நாகேஷ் நினைவுகளை அசைபோட்டு அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்தி வருகின்றனர்.

தலைவா

தலைவா

நடிகர் நாகேஷ் உடன் நம்மவர் கமல் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு, #HBDNagesh sir என்ற ஹாஷ்டேக்கையும் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். நடிகர் நாகேஷின் பிறந்தநாளை மறவாமல் நினைவு கூர்ந்து வாழ்த்திய கமலை தலைவா என அவரது ரசிகர்கள் போற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

நடிப்பு அரக்கன்

நடிப்பு அரக்கன்

நாகேஷ் எனும் நடிப்பு அரக்கன் என நம்மவர் படத்தில் நாகேஷ் போலீஸ் நிலையத்தில் நடித்த காட்சி ஒன்றையும் பதிவுட்டு கமல்ஹாசன் ரசிகர்கள் நாகேஷை நினைத்து கொண்டாடி வருகின்றனர். பல தலைமுறைகள் கடந்தும் அவரது நடிப்பும் நகைச்சுவையும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X