அப்பாடி, ஒரு வழியாக இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்ட கமல்
Recommended Video
சென்னை: கமல் ஹாஸன் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இந்தியன் 2 என்ற பெயரில் எடுத்து வருகிறார். படப்பிடிப்பு துவங்கியதில் இருந்தே ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்டு அவ்வப்போது நிறுத்தப்பட்டது.

முன்னதாக கமல் ஹாஸனின் லுக் பிடிக்காமல் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனமான லைகா இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டது. கமல் ஹாஸன் தேர்தல் வேலையை கவனிக்க வசதியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதற்கிடையே பட்ஜெட் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் ஒரு வழியாக இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. கமல் ஹாஸன் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். அவர் இந்தியன் 2 படத்திற்காக களரி கற்றுள்ளார்.
படத்தில் சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தன் கதாபாத்திரம் படம் முழுக்க வரும் என்று ப்ரியா தெரிவித்துள்ளார். முதல் முறையாக விவேக் கமல் ஹாஸனுடன் சேர்ந்து நடிக்கிறார். இந்தியன் படத்தை போன்றே இந்த படமும் நிச்சயம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று நம்பப்படுகிறது.
சித்தார்த் கமல் ஹாஸனின் பேரனாக நடிப்பதாக கூறப்படுகிறது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இம்முறையாவது பிரச்சனை எதுவும் ஏற்படாமல் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதே கமல் ரசிகர்களின் வேண்டுதல்.
கமல் ஹாஸன் அரசியல் கட்சி தலைவரான பிறகு இந்தியன் 2 படத்தில் நடிப்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது. படத்தில் அரசியல் பன்ச் வசனம் எல்லாம் இருக்கும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.


Click it and Unblock the Notifications











