டெல்லியில் படக்குழு.. விக்ரம் படத்தில் தனது கேரக்டர்.. வெளிப்படுத்திய கமல்ஹாசன்!

டெல்லி : நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ளது விக்ரம் படம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தில் கமல் நடித்துள்ளார்.

இந்தப் படம் 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளது. இதையடுத்து டெல்லியில் படக்குழு பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

விக்ரம் படம்

விக்ரம் படம்

நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், சூர்யா, விஜய் சேதுபதி, நரேன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது விக்ரம் படம். கடந்த 1986ல் வெளியான கமலின் விக்ரம் படத்திலிருந்து இந்தப் படத்திற்கான கருவை எடுத்து அதை லோகேஷ் கனகராஜ் டெவலப் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 3ம் தேதி ரிலீஸ்

ஜூன் 3ம் தேதி ரிலீஸ்

முன்னதாக பழைய விக்ரம் மற்றும் தற்போதைய விக்ரம் படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்தப் படத்திலிருந்து கதைக்கரு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் ஜூன் 3ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

சிறப்பான பிரமோஷன்கள்

சிறப்பான பிரமோஷன்கள்

இதையொட்டி சிறப்பான பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் சென்னையில் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் பிரம்மாண்டமான நிகழ்ச்சி மூலம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிம்பு கலந்து கொண்டார். தொடர்ந்து சரக்கு ரயில்களில் படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

5 மொழிகளில் படம் ரிலீஸ்

5 மொழிகளில் படம் ரிலீஸ்

படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளது. வெளிநாடுகளிலும் ஏராளமான திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. முன்னதாக கேன்ஸ் திரைப்பட விழாவில் படத்தின் ட்ரெயிலர் திரையிடப்பட்டு அனைவரது பாராட்டுக்களையும் பெற்றது.

கேன்சில் விக்ரம் ட்ரெயிலர்

கேன்சில் விக்ரம் ட்ரெயிலர்

படம் வெளிநாடுகளில் திரையிடப்பட உள்ள நிலையில், இது படத்திற்கான சிறப்பான பிரமோஷனாக அமைந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. இதில் பேசிய கமல்ஹாசன் படத்தின் மூன்றாவது பாகத்தை லோகேஷ் கனகராஜ்தான் இயக்கவுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரமோஷனுக்காக டெல்லியில் படக்குழு

பிரமோஷனுக்காக டெல்லியில் படக்குழு

இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் பிரமோஷனுக்காக படக்குழு டெல்லிக்கு சென்றுள்ளனர். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், படத்தில் தன்னுடைய கேரக்டர் மிகவும் மர்மமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கேரக்டர் நல்லவனா அல்லது கெட்டவனா என்பதை ரசிகர்களால் உணர முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

பெரியத்திரையில் பார்க்க ஆர்வம்

பெரியத்திரையில் பார்க்க ஆர்வம்

4 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள நிலையில், இந்தப் படத்தை பெரிய திரையில் பார்க்க ரசிகர்களை போலவே தானும் ஆர்வத்துடன் உள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்தப் படம் முழுமையாக லோகேஷ் கனகராஜின் படமாகவே உருவாகியுள்ளதாகவும் அவருடைய டைரக்ஷனில் தான் எந்த வகையிலும் தலையிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கமலின் ஏக்கம்

முன்னதாக கமலின் ஏக்கம்

ஒரு நல்ல சாப்பாட்டை அனைவருடனும் ஷேர் செய்து சாப்பிடுவதை போல இந்தப் படத்தை தான் விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்றவர்களுடன் ஷேர் செய்து நடித்துள்ளதாகவும் கமல் நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இதே விக்ரம் டைட்டிலில் வேறொரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் அந்த டைரக்டர் அதை ஏற்கவில்லை என்றும் கமல் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறப்பான விக்ரம் டைட்டில்

சிறப்பான விக்ரம் டைட்டில்

ஆனால் தற்போது விக்ரம் படத்தின் டைட்டில்தான் வேண்டும் என்று லோகேஷ் அடம்பிடித்ததாகவும் கமல் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2019ல் கமலின் விஸ்வரூபம் 2 படம் ரிலீசானது. அடுத்த ஆண்டிலேயே விக்ரம் படத்தின் சூட்டிங் துவங்கிய நிலையில், கொரோனா காரணமாக படத்தின் சூட்டிங் தள்ளிப் போனது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X