Kamal Haasan: நானும் தற்கொலை பண்ணிக்க நினைச்சேன்.. லயோலா கல்லூரியில் கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு!
சென்னை: Kamal Haasan - நடிகர் கமல்ஹாசன் நேற்று லயோலா கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் பேசிய பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.
லயோலா கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன் தனக்கும் தற்கொலை எண்ணம் ஏற்பட்டதாகவும்.. ஆனால், அது தவறு என பின்னர் புரிந்து கொண்டேன் என்று பேசியது பலரையும் கவர்ந்துள்ளது.

லயோலா கல்லூரியில் கமல்: சில தினங்களுக்கு முன், இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தனது வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்டு மரணித்தது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் ரசிகர்களையும் மிகவும் வேதனையில் ஆழ்த்தியது.
மாணவர்கள் மத்தியில் அதிகமாக தற்கொலை எண்ணம் ஏற்பட்டு வரும் நிலையில், அந்த எண்ணத்தை கடந்து வாழ்க்கையில் சாதிப்பது எப்படி என்பது குறித்த பேச்சை நடிகர் கமல்ஹாசன் லயோலா கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார்.
கமலுக்கு வந்த தற்கொலை எண்ணம்: சிறுவயதிலேயே சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், இளைஞன் ஆன பின்னர் 20 வயது 21 வயது இருக்கும் போது சினிமாவே என்னை ஒதுக்கியது போல இருந்தது. அப்போது எனக்கும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்கிற எண்ணம் தோன்றியது.

மாணவர்களுக்கு அறிவுரை: ஆனால், என்ன ஆகுதுன்னு பாத்துடலாம்னு ஒரு குருட்டு தைரியத்தி்ல் கடைசிவரை முயற்சி செய்ய முடிவெடுத்தேன் இப்போ உங்கள் முன் கமல்ஹாசனாக நிற்கிறேன். மரணம் அனைவரும் வாழ்விலும் ஒரு அங்கம். அது வரும் போது வரட்டும். நாமாக அவசரப்பட்டு விடக்கூடாது. தற்கொலை எண்ணத்தை தாண்டி வாழ்ந்தவர்கள் பலர் சாதனையாளர்களாக உள்ளனர் என்ன மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாகவும் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சிறு பிரச்சனைகளுக்காக பெரிய முடிவை எடுத்து விடக்கூடாது என்பதற்காகவும் உலகநாயகன் பேசிய பேச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இந்த வயதிலும் கடின உழைப்பு: அக்டோபர் ஒன்றாம் தேதி கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக் பாஸ் 7 ஆரம்பமாக உள்ளது. இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை முடித்த கமல் பிரபாஸின் கல்கி படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அடுத்து எச் வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள ஆக்சன் படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள படத்திலும் கமல் நடிக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











