நமட்டுச் சிரிப்புக்கு ’நறுக்’ போட்ட கமல்.. புழுவாய் துடித்த பாலா.. ஓவரா ஆடுனா இது தான் தம்பி கதி!

சென்னை: தனது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இருந்தாலும், வாங்குன காசுக்கு வேலை செய்ய வேண்டும் என்பதில் கமல் காட்டும் நேர்மையை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

பிறந்தநாள் என்பதால், போனா போகுது என விட்டு விடாமல், பாலாஜியையும் சம்யுக்தாவையும், ஆரியையும் வெளுத்து விட்டது செம சூப்பர்.

இனியாவது பாலா தனது போக்கை மாற்றுகிறாரா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

கமலின் வாத்தி ரெய்டு

கமலின் வாத்தி ரெய்டு

சார் எனக்கு பிறந்தநாள் சார் என ஸ்கூல்ல வாத்தியார் கிட்ட சாக்லேட் கொடுத்தா சில வாத்தியார் அடிக்க மாட்டாங்க, ஆனால், 50 பைசா சாக்லேட்டுக்கு எல்லாம் என்னை ஏமாத்த முடியாது, என அந்த பையன் அன்னைக்கு ஹோம் வொர்க் எழுதலைன்னாலும் சில வாத்தியாருங்க வச்சு வெளுத்து விடுவார்கள் அப்படித்தான் இன்றைய நிகழ்ச்சியிலும் கமல் பாலாவை வெளுத்தது.

’உதை’ பஞ்சாயத்து

’உதை’ பஞ்சாயத்து

பாலாவை நான் விளையாட்டாத்தான் கிக் பண்ணேன். அது அவரை ஹர்ட் பண்ணியிருந்தா பதிலுக்கு என்னை உதைச்சிக்கங்கணும் சொன்னேன் என சனம் ஷெட்டி சொன்னதை போலவே பாலாவும் நீங்களும் என்னை தறுதலைன்னு திட்டி இருந்தீங்கன்னா இன்னைக்கு கமலுக்கு பஞ்சாயத்து பண்ண வேலையே இல்லாமல் போயிருக்கும்.

பாலாவுக்கு பாராட்டு

பாலாவுக்கு பாராட்டு

நல்ல வேளை பாலா, அவங்க உதை.. உதைன்னு சொன்னதும் பதிலுக்கு நீங்க உதைக்காம இருந்தது என பாலாஜி முருகதாஸை அந்த ஒரு விஷயத்துக்காக பாராட்டியதும், ஓஹோ நாம செஞ்சது சரிதான் போல, கமல் சாரே நம்மளை பாராட்டுறாரே என பாலா நினைப்பதற்குள் அவரை ஆஃப் பண்ணி ஆப்பு அடிச்சிட்டார் கமல்.

நமட்டுச்சிரிப்புக்கு நறுக்

நமட்டுச்சிரிப்புக்கு நறுக்

கமல் பாராட்டியதும் சிரித்த பாலாஜியை, பார்த்து சிரிக்காதீங்க பாலாஜி என ஒரே போடாக போட்டு ஆஃப் பண்ணி விட்டார். திட்டுனீங்களே அந்த வார்த்தை ஞாபகம் இருக்கிறதா? என நேராக பஞ்சாயத்துக்கே வந்து விட்டார் பரமக்குடிக்காரர். பாலாஜியின் நமட்டுச்சிரிப்புக்கு நறுக் போட்ட கமலை பார்த்து பாலாஜி ஹேட்டர்ஸ் பாராட்டி வருகின்றனர்.

தறுதலைன்னு சொன்ன கமல்

தறுதலைன்னு சொன்ன கமல்

பாலாஜி முருகதாஸ் ஆரம்பித்து வைத்த அந்த வார்த்தையை சொல்லாமல் சாட்டையை சுழற்றிக் கொண்டிருந்தார் கமல். சுரேஷ் சக்கரவர்த்தி ஆக்‌ஷனில் அந்த வார்த்தையை நாசுக்காக சொல்ல, சனம் ஷெட்டி ஓப்பனாகவே போட்டு உடைத்தார். சனம் ஷெட்டிக்கு ஒரு குட்டு வைப்பது போல, அந்த வார்த்தையே நானே சொல்றேன் என தறுதலை.. தறுதலைன்னு 4 வாட்டி சொல்லி, இனி அந்த வார்த்தை பிக்பாஸ் வீட்டில் வரக்கூடாது என எச்சரித்தார்.

அப்போ ரெட் கார்டு?

அப்போ ரெட் கார்டு?

அவ்ளோ தான் பாலாஜியை கமல் ரொம்ப வறுத்து எடுத்துட்டார். பாலாஜி ஹேட்டர்ஸ் எல்லாம் அமைதியாகிடுங்க, அப்போ அந்த ரெட் கார்டு? எனக் கேட்பவர்களுக்கு பிம்பிளிக்கா பிள்ளாப்பி தான். ஆரி பிரதர், நிகழ்ச்சி முடியுறதக்குள்ள பாலாவை திருத்திவிட்டு, அவர் பாலாவாக மாறிடுவார் இப்பவே பாதி மாறிட்டார், வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X