கமலிடம் சிக்கி சின்னாபின்னமாகும் கன்டென்ட் கிங்.. இன்னைக்கு சரியான சம்பவம் காத்திருக்கு போல!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 20வது நாளுக்கான மூன்றாவது புரமோ வெளியாகி பிக் பாஸ் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.

அதற்கு காரணம், கன்டென்ட் கிங் அபிஷேக் ராஜாவை சும்மா கிழி கிழியென கமல் சார் கிழித்துத் தொங்க விட்டு இருப்பது தான்.

நிஜமாவே நீங்க பிக் பாஸ் பார்த்தது இல்லையா அபிஷேக்? என கமல் கேட்க அவரிடமே சத்தியம் செய்து அபிஷேக் சொல்வது வேற லெவல் என்டர்டெயின்மென்ட்.

சாட்டை அடி

சாட்டை அடி

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் நிச்சயம் போன சீசன் போல இல்லாமல் கொஞ்சம் சாட்டையை சுழற்றுவார் என்றே தெரிகிறது. கலந்து கொண்ட போட்டியாளர்களும் அந்த அளவுக்கு இந்த வாரம் ரசிகர்களை இம்சித்துள்ளனர். அதற்கெல்லாம் வைத்து கமல் இன்றைக்கு அனைவரையும் கேள்விகளால் துளைத்து எடுத்துள்ளார் என்பதை வெளியான 3 புரமோக்களும் உறுதி படுத்தி உள்ளன.

அகப்பட்டான் அபிஷேக்

அகப்பட்டான் அபிஷேக்

அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் என்பது போல கமல் சாரிடம் இன்றைய எபிசோடில் வசமாக சிக்கி உள்ளார் நம்ம கன்டென்ட் கிங் என தானே சொல்லிக் கொள்ளும் அபிஷேக் ராஜா. நிஜமாவே பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தது இல்லையா அபிஷேக் என கமல் வியப்பாக கேட்பது போல கேட்டு அபிஷேக்கை தனது தூண்டிலில் வசமாக சிக்க வைத்துள்ளார்.

பொய் சத்தியம்

பொய் சத்தியம்

இங்க வரதுக்கு முன்னாடி நீங்க பிக் பாஸ் பார்த்தது இல்லையா என கமல் சார் கேட்க.. சத்தியமா பார்த்தது இல்லை சார் என அபிஷேக் ராஜா கமலிடமே பொய் சத்தியம் செய்துள்ளார் என நெட்டிசன்கள் திட்டத் தொடங்கி உள்ளனர். வசமாக ஆண்டவரிடம் சிக்கப் போறான் இந்த சீசனில் அபிஷேக் என கலாய்த்து வருகின்றனர்.

புரமோ மட்டும் பார்ப்பேன்

புரமோ மட்டும் பார்ப்பேன்

நீங்க வீக்கெண்ட் வீக்கெண்ட் வரும் போது மட்டும் பார்த்து இருக்கேன் சார் என அபிஷேக் சொல்ல கொஞ்சம் பார்த்து இருக்கீங்க என கமல் அணை போட அதற்கும் புரமோ மட்டும் பார்த்து இருக்கேன் சார் என மறுபடியும் பொய் பேசி வாட்டமாக சிக்கி உள்ளார் அபிஷேக் ராஜா.

இறுதி வரை யோசிக்கிறீங்க

இறுதி வரை யோசிக்கிறீங்க

டாப் 5 கன்டெஸ்டன்ட், ஷோவோட இறுதி வரை யோசிச்சு விளையாடுறீங்க பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தது இல்லைன்னு சொல்றீங்களே என கமல் தகிடு தத்தம் மியூசிக் உடன் சாட்டையை சுழற்ற இமான் அண்ணாச்சி உள்ளிட்ட சக போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் அபிஷேக் சிக்கிட்டான் டா என கொண்டாடி வருகின்றனர்.

சேவ் ஆகிடுவார்

சேவ் ஆகிடுவார்

பிரியங்கா மற்றும் அபிஷேக் ராஜாவை வச்சி இந்த சீசனை இன்னும் நிறைய ஓட்ட வேண்டி இருப்பதால் இருவரையும் திட்டுவது போல திட்டி சேவ் செய்து விடுவார் கமல் சார் என்று நெட்டிசன்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் சேர்த்து கலாய்த்து வருகின்றனர். எப்படி இருந்தாலும், இன்றைக்கு பிரியங்காவுக்கும் அபிஷேக்கிற்கும் சக போட்டியாளர்கள் மத்தியில் மூக்குடைப்பு நடக்க உள்ளதே கலக்கலான விஷயம் என ஷோவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X