தாமரையை நோக்கி துப்பினது தப்புதான்.. விதிமீறல் நடந்திருக்கு.. கட்டிபுடி டிராமா கமல் கிட்ட பலிக்காது!

சென்னை: பிக் பாஸ் விதிகளை மீறி படுமோசமான முறையில் பிரியங்கா மற்றும் தாமரை சண்டை போட்டதை அவர்களே உணர்ந்த நிலையில், விக்கெண்ட் ஆனால் கமல் சார் வறுத்து எடுப்பாரே என நினைத்து கட்டிப்புடித்து போட்ட டிராமா எல்லாம் வீணாய் போய் விட்டது.

வாரம் தொடங்கியதும் சண்டை போட்டுக் கொள்வதும், வார இறுதியில் சமாதானம் ஆகிக் கொள்வதுமாகவே இந்த சீசனில் போட்டியாளர்கள் செம ஸ்ட்ராட்டஜி கேம் ஆடி வருகின்றனர்.

வாரம் முழுக்க நடந்த விஷயங்களை விசாரித்து வெளுத்து வாங்கும் வேலையை இந்த வாரம் கமல் சரியாக செய்வார் என தற்போது வெளியாகி உள்ள புரமோ 2வை பார்த்த ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.

சளைத்தவர்க்ள் அல்ல

சளைத்தவர்க்ள் அல்ல

கத்தி பேசி ஹெட்செட் போட்டு பிக் பாஸ் பார்ப்பதையே நிறுத்த வைத்து சாதனை படைத்த பெருமை இந்த சீசனில் பிரியங்கா மற்றும் தாமரைக்கே சேரும். மேலும், ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை ஏகப்பட்ட விதிமீறல்களும் பொய்களையும் பேசி ரசிகர்களை வெறுப்படைய செய்துள்ளதாக பிரியங்கா ஆர்மியும் தாமரை ஆர்மியும் தனித்தனியாக பட்டியல் போட்டு கழுவி ஊற்றி வருகிறது.

பேய்க்கும் பேய்க்கும் சண்டை

பேய்க்கும் பேய்க்கும் சண்டை

காஞ்சனா படத்தில் வரும் பேய்க்கும் பேய்க்கும் சண்டை அதை ஊரே வேடிக்கை பார்ப்பது வசனம் போல இந்த வாரம் முட்டை உடைக்கும் டாஸ்க்கில் தாமரை மற்றும் பிரியங்கா போட்ட வரம்பு மீறிய சண்டை பிக் பாஸ் ரசிகர்களை கடுப்பாக்கியது. ஆனால், அந்த எபிசோடை தவிர்த்து மற்ற எபிசோடுகள் எல்லாம் உப்பு சப்பு இல்லாத எபிசோடுகளாக இருந்தது தனிக்கதை.

காதலர்களை போல சமாதானம்

காதலர்களை போல சமாதானம்

தான் தானமாக பெற்ற காயினை சுருதியும் பாவனியும் சேர்ந்து திருடி விட்டார்கள் என அவர்களிடம் பேசாமல் அந்த பேச்சு பேசிக் கொண்டிருந்த தாமரை பிரியங்கா காரித்துப்பி கைகலப்பு நடந்த பிறகு பொட்டு வச்சி பிரியங்காவுடன் நட்பாக பண்ண வேலையெல்லாம் ரசிகர்களை ரொம்பவே இரிடேட் செய்தது. நிரூப் அந்த அளவுக்கு சாத்தான் வேதம் ஓதினாலும் அதையெல்லாம் காதில் வாங்காமல் பிரியங்காவை பகைத்துக் கொண்டால் ஓட்டுப் போய் விடும் என அவருடன் காதலரை போல கட்டிலில் கட்டிப்புரண்டு விளையாடியது நிகழ்வுகளெல்லாம் அடேங்கப்பா ரகம் தான்.

ரோஸ்ட் பண்ணும் ஹோஸ்ட்

ரோஸ்ட் பண்ணும் ஹோஸ்ட்

என்ன தான் வெள்ளிக்கிழமை ராமசாமியாக பட்டைப் போட்டு தாமரையும், பவ்யமாக பிரியங்காவும் மாறினாலும் வாரம் முழுக்க அவங்க என்ன என்ன பண்ணாங்க எதற்காக திடீரென மாறினாங்க என்பதை அனைத்தையும் அலசி ஆராய்ந்து ரோஸ்ட் பண்ணும் வேலையை இன்றைய இரண்டாவது புரமோவில் சிறப்பாக செய்துள்ளார். நேற்றைய இரண்டாவது புரமோவிலும் பிரியங்கா இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

விதிமீறல் பண்ணிட்டீங்க

விதிமீறல் பண்ணிட்டீங்க

சாதாரணமாக தள்ளிவிடுவதில் தொடங்கி அடித்து தள்ளிவிடுவது என ரொம்பவே விதிமீறல்கள் பண்ணிட்டீங்க தாமரை என்றதும் நேற்று நட்பாக பழகியதை எல்லாம் மறந்து விட்டு முகத்தை பிரியங்காவை விட மோசமாக அஷ்ட கோணத்தில் வைத்துக் கொண்டு விளக்கம் கொடுக்க தாமரை முன் வர விதிமீறல் விதிமீறல் தான் என கமல் கண்டித்து விட்டார்.

தாமரையை துப்பினது தப்புதான்

தாமரையை துப்பினது தப்புதான்

பிரியங்கா தாமரையை பார்த்து தூ என துப்பியதை அவரே மறந்து துடைத்துப் போட்டு முத்தம் கொடுத்து நட்பாகி விட்ட நிலையில், மீண்டும் அதனை நினைவுபடுத்தி கமல் கொளுத்திப் போட்டிருக்கும் புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வாரமும் பிரியங்காவை வறுத்தெடுத்துள்ளார் கமல்.

ரெட் கார்டு கிடையாது

ரெட் கார்டு கிடையாது

தாமரை மற்றும் பிரியங்கா செய்தது விதிமீறல் என விளாசித் தள்ளும் கமல்ஹாசன் இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புவாரா? என்கிற கேள்வியை ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர். இந்த இருவரும் என்ன தான் எல்லை மீறினாலும் இவர்கள் இருவரும் இல்லை என்றால் இந்த சீசன் இன்னும் சொதப்பி இருக்கும் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X