வீட்டை மிஸ் லீடு பண்றீங்க.. பாவனி மற்றும் அபிநய்க்கு குறும்படம் போட்டு பந்தாடிய கமல்!

சென்னை: சனிக்கிழமை நிகழ்ச்சியில் ராஜு மற்றும் பிரியங்காவை வெளுத்து வாங்கிய கமல் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் பாவனி மற்றும் அபிநயையும் சும்மா விடவில்லை.

ஒரு தரப்பாக கமல் பேசுகிறார் என்கிற குற்றச்சாட்டு எழுந்து விடக் கூடாது என உணர்ந்து பாவனி மற்றும் அபிநய்க்கும் இந்த விவகாரத்தில் உள்ள சம்மந்தத்தை குறும்படமாக போட்டுக் காட்டி பந்தாடி இருக்கிறார்.

வீட்டையே மிஸ் லீடு பண்றீங்க என பாவனி மற்றும் அபிநயை பார்த்து கமல் கேள்வி கேட்க நேற்று ஆக்ரோஷமாக கைதட்டிய கைகள் எல்லாம் இன்று அடங்கி விட்டன.

பாவனிக்கு குறும்படம் பார்சல்

பாவனிக்கு குறும்படம் பார்சல்

இந்த வாரம் பிரியங்காவுக்கு குறும்படம் வரும் என எதிர்பார்த்த பிக் பாஸ் ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்டாக பாவனிக்கு ஒரு குறும்படத்தை போட்டு மாஸ் காட்டி விட்டார் கமல் சார். ராஜுவை ரோஸ்ட் பண்ணும் போது சந்தோஷப்பட்ட பாவனி ஆர்மியினர் இன்று பாவனிக்கு பிக் பாஸ் ஹோஸ்ட் கமல் குறும்படம் போட்ட உடன் அவரையே கழுவி ஊற்றி வருகின்றனர்.

சம்மந்தப்பட்ட இருவர்

சம்மந்தப்பட்ட இருவர்

பாவனிக்கு குறும்படம் போட்டுக் காட்டியதும் அப்படியே ஆஃப் ஆகி போய் விட்டார் என்பது மூன்றாவது புரமோவை பார்த்த உடனே புரிந்து கொள்ள முடிகிறது. இந்த குறும்படம் சொல்வது வேறு செய்தி.. இது யாருமே நேரடியா பேசலைங்கிறது தான் என கமல் சொல்ல இல்லை சார் என பாவனி பேச முயற்சிக்க நான் பேசுறது மத்தவங்கள இல்லை சம்மந்தப்பட்ட இருவர் சொல்லாததால் தான் இந்த குழப்பம் வீட்டு பிரச்சனையாக மாறியது என பாவனி மற்றும் அபிநய்யை பந்தாடி உள்ளார்.

மிஸ் லீடு

மிஸ் லீடு

எனக்கு என்னம்மோ இந்த வீட்டை மிஸ் லீடு பண்ணிட்டீங்களோ.. உங்க மேல வராம திசை திருப்பி விட்டுட்டீங்களோ என அபிநய்க்கு எதிராக சாட்டையடி கேள்விகளை கமல் கேட்டு வெளுத்து வாங்கும் மூன்றாவது புரமோ வைரலாகி வருகிறது.

பிளேயிங் சேஃப்

பிளேயிங் சேஃப்

எனக்கே புரியல பிளேயிங் சேஃப்னு பார்த்தா இவங்க ரெண்டு பேரு பண்றது தான் பிளேயிங் சேஃப் என கமல் ஒரேயடியாக பாவனி மற்றும் அபிநய் பக்கம் சாட்டையை சுழற்ற எதிர்பாராததை எதிர்பார்த்தது போல ராஜு மற்றும் பிரியங்கா ஆர்மியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

குழம்பும் ரசிகர்கள்

குழம்பும் ரசிகர்கள்

அவங்க காதல் பண்ணினால் கூட அதில் தப்பு இல்லை என்றும் அது பற்றி யாரும் கேள்வி எழுப்பக் கூடாது என்றும் என் வீட்டு பெட்ரூமை யாரும் எட்டிப் பார்க்க வேண்டாம் என நேற்று அப்படி பேசிய கமல் இன்று இப்படி பேசும் அளவுக்கு அந்த குறும்படத்தில் என்ன காட்டப்பட்டது என்கிற கேள்வியை எழுப்பி ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X