Don't Miss!
- News தலைகீழாக திரும்புதே.. விவசாயிகளுக்கு குஷி.. இனி "ஸ்பாட் ஆக்ஷன்".. தமிழக அரசின் புது அதிரடி வருகிறது
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அபிஷேக்கை போட்டுக் கொடுத்த அமீர்.. பஞ்சரான பிரியங்கா.. நாக்கை கடித்து ரசித்த ரசிகை.. பரபர புரமோ!
சென்னை: குறும்படம் போடுங்க பிக் பாஸ் என கும்பிடு போட்டு கத்தி டிராமா பண்ணிய பிரியங்காவுக்கு இரண்டாவது புரமோவிலேயே சாட்டை அடி கொடுத்துள்ளார் கமல்ஹாசன் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கொரோன பாதிப்பில் இருந்து மீண்ட கமல்ஹாசன் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை இந்த வாரம் சரவெடியாக ஆரம்பித்துள்ளார்.
இந்த ஃபயர் தான் போன வாரம் மிஸ் ஆச்சு என ரசிகர்கள் இன்றைய எபிசோடுக்காக காத்திருக்கிறார்கள்.
கொரோனாவில் இருந்து மீண்ட கமல்.. மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அதிரடி கம்பேக்.. வைரலாகும் புரமோ!
ஓப்பனா சொன்ன அமீர்
பிரியங்காவிடம் மறைமுகமாக அபிஷேக் பற்றி சொல்லி வந்த அமீரை நோக்கி நீங்க சொல்ல நினைத்ததை நேரடியாகவே சொல்லி விடுங்க அமீர் என கமல் க்ரீன் சிக்னல் கொடுக்க அபிஷேக் வலையில் பிரியங்கா எப்படி மாட்டி இருக்கிறார் என்பதை புட்டு புட்டு வைத்தார் நம்ம ஒற்றன் அமீர்.
குழி பறிக்கும் அபிஷேக்
பிரியங்கா அபிஷேக்கை நம்பி டோட்டலா ஸ்பாய்ஸ் ஆகிட்டு இருக்காங்க.. கூடவே இருந்து சில பேர் குழி பறிப்பாங்க.. நான் வந்து என் ஃபிரண்ட சேவ் பண்ணனும் நினைச்சேன்னா.. இன்னும் கொஞ்சம் ஏத்தி விட்டு வேடிக்கை பார்க்க மாட்டேன் என பிரியங்காவின் புத்திக்கு உரைக்கும் படி சொல்லி விட்டார்.
தலை தொங்கிடுச்சு
மறுபடியும் வாய் கொடுத்து புண்ணாக்கிக் கொண்டேமே.. இந்த வாரம் நம்மை தான் மீண்டும் தூக்கி அடிக்க போறாங்க.. ரம்யா கிருஷ்ணன் மேடம்க்கு போன வாரம் பெருசா ஐஸ் வச்சதெல்லாம் வீணாப் போச்சே.. அதுக்குள்ள கமல் சார் மீண்டும் ஷோவுக்கு வந்துட்டாரே என அபிஷேக்கின் தலை டோட்டலாக தொங்கிடுச்சு என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
நான் ஸ்ட்ராங் பிளேயர்
பிக் பாஸ் வீட்டில் நான் ஸ்ட்ராங் பிளேயர், தாமரை வேலைக்காரி என ஒவ்வொருவர் பற்றியும் மட்டம் தட்டுவதை போலவே தட்டி பேசும் பிரியங்காவை பஞ்சர் ஆக்குவது போல கமல் சார் நான் ஸ்ட்ராங் பிளேயர்.. நான் நல்ல நடிகன்னு மக்கள் சொல்லணும் என ஆஃப் பண்ண அதிரடி புரமோ வைரலாகி வருகிறது.
நாக்கை கடித்த ரசிகை
அபிஷேக் மற்றும் பிரியங்காவுக்கு கமல் சார் டோஸ் கொடுக்க கொடுக்க உங்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்பது போல ஒரு பிக் பாஸ் ரசிகை நாக்கை கடிக்கும் வீடியோ ஸ்க்ரீன் ஷாட்களாகவும் மீம் மெட்டீரியலாகவும் மாறி வருகிறது. அபிஷேக் மேல உனக்கும் அந்த அளவுக்கு கோபமாம்மா?
பிரியங்காவை காப்பாற்ற
நடன இயக்குநர் அமீரை வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே அனுப்பியதும், தொடர்ந்து கமல்ஹாசன் பிரியங்காவுக்கு புத்திமதி சொல்வதும் விஜய் டிவி தொகுப்பாளினியான பிரியங்காவை காப்பாற்றவே என்றும், இந்த வாரம் நல்லா விளையாடிய அபிஷேக்கை இப்படி காவு கொடுக்க போறாங்களே என்றும் அபிஷேக் ஆர்மியினர் அப்செட் ஆகி உள்ளனர்.