டாஸ்க்… ட்விஸ்ட்…. பல மாற்றங்களுடன் பிக் பாஸ் சீசன் 5… வெளியானது சூப்பர் அப்டேட் !

சென்னை : விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 4 சீசன்கள் முடிவடைந்துள்ளன.

பிக் பாஸ் 5வது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில், 5வது சீசனில் ஒரு சில மாற்றங்களை செய்து நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கும் முயற்சியை விஜய் டிவி கையில் எடுத்துள்ளது.

சீசன் 5 அக்டோபர் முதல் வாரத்திலிருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிகுந்த வரவேற்பு

மிகுந்த வரவேற்பு

வெளிநாடுகளில் பிரபலமான இந்த நிகழ்ச்சியில் முதன்முறையாக இந்தியாவில் பிக் பாஸ் என்ற பெயரில் இந்தியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பை அடுத்து இந்த நிகழ்ச்சி தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் வெளியானது. பல ரசிகர் பட்டாளங்களை கொண்டு மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக உள்ளது.

பிக் பாஸ் 15 விரைவில்

பிக் பாஸ் 15 விரைவில்

இந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 முதல் பகுதியை தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான அஷ்ரத் வர்ஷி தொகுத்து வழங்கினார்.இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து பிக் பாஸ் சீசன் 4 முதல் தற்போது வரை சல்மான்கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்தியில் பிக் பாஸ் 14 முடிவடைந்து விரைவில் பிக் பாஸ் 15 வெளியாக உள்ளது.

3 சீசன்கள் முடிந்தன

3 சீசன்கள் முடிந்தன

தெலுங்கில் மூன்று சீசன் முடிந்து 4வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. முதல் சீசனை ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கினார். அதன் பின்னர் நாகார்ஜூன் தொகுத்து வழங்கி வருகிறார். இதேபோல, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 3 வது சீசன் முடிந்துள்ளது.

ஆரி வெற்றி பெற்றார்

ஆரி வெற்றி பெற்றார்

தமிழில் 4வது சீசன்களையும் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய 4வது சீசன் ஜனவரி மாதம் முடிவடைந்தது. இதில் ஆரி வெற்றி பெற்றார், அடுத்தடுத்த இடங்களை பாலாஜி, ரியோ பெற்றனர்.

அக்டோபரில்

அக்டோபரில்

5வது சீசன் ஜூன் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கொரோனா காரணமாக தள்ளிப்போய் தற்போது அக்டோபர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 5ல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதுவித டாக்ஸ்

புதுவித டாக்ஸ்

கடந்த சீசன்களைக் போல வெறும் டாஸ்க்குகள் மட்டும் இல்லாமல் திறமைக்கு சவால்விடும் வகையில் புதுவிதமான சவால்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கடந்த சீசனில் சின்னத்திரை பிரபலங்கள் இடம்பெற்று இருந்தனர். சீசன் 5ல் சினிமா பிரபலங்களை பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X