சரி குத்து...நடுத்தெருவில் குத்தாட்டம் போட்ட கமல் மகள்
கோவை : தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கோவை தெற்கு தொகுதியில் கமல் போட்டியிடுகிறார். பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று கமல், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்திற்கு சென்றார்.
இதனால் கமலின் இளைய மகளான அக்ஷரா ஹாசனும், அண்ணன் மகளான சுஹாசினி மணிரத்னமும் கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், டார்ச் லைட்டுடன் சென்று வீடு வீடாக ஓட்டுக் கேட்டனர். கமல் கோவையில் பிரச்சாரத்தை துவக்கியது முதல் அவரது மகள் அக்ஷரா, கமலுக்கு உதவியாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் அப்பாவுடன் தானும் பிரச்சாரத்திற்கு சென்ற ஃபோட்டோக்களை அவர் இன்ஸ்டாகிராமிலும், ட்விட்டரிலும் வெளியிட்டிருந்தார். அதில் தனது தந்தை உண்மையான போராளி என்றும், அவர் ஜீன்ஸ் போட்ட காந்தி என்றும் கூறி இருந்தார்.
இந்நிலையில் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று, வாக்காளர்களை உற்சாகப்படுத்த, அக்ஷரா நடுத்தெருவில் குத்தாட்டம் போட்டுள்ளார். தாரை, தப்படைகள் கிழிய வாசித்த இசைக்கு அக்ஷரா நடனம் ஆடினார். அவருடன் சேர்ந்து சுஹாசினியும் ஆடி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அக்ஷரா ஹாசன், அஜித் நடித்த 'விவேகம்', விக்ரம் நடித்த 'கடாரம் கொண்டான்' ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். சில இந்தி படங்களிலும் நடித்துள்ள இவர், தற்போது 'அச்சம் மடம் நாணம் பயிற்ப்பு' என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











