வயசான ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க சொல்றாங்க.. கமலின் முன்னாள் மனைவி சரிகா புலம்பல்!
சென்னை: அமேசான் பிரைமில் விரைவில் வெளியாக உள்ள ஆந்தாலஜி படமான 'மாடர்ன் லவ் மும்பை' மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார் நடிகை சரிகா.
அதன் புரமோஷனுக்காக பேட்டி அளித்து வரும் சரிகா, சமீபத்தில் 2000 ரூபாய்க்காக நாடகங்களில் நடித்து வருகிறேன் என்றும் கொரோனா லாக்டவுன் காலத்தில் பணக் கஷ்டத்தால் ரொம்பவே அவதிப்பட்டேன் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், தனது வயதை ஒத்த நடிகர்களுக்கு அம்மாவாக நடிக்க சொல்றாங்க என்றும் தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் புலம்பித் தள்ளி உள்ளார்.

மீண்டும் நடிக்க வந்த சரிகா
நடிகர் கமல்ஹாசனை திருமணம் செய்து கொண்டதன் பிறகு சினிமாவில் இருந்து நடிப்பதை நிறுத்திக் கொண்டு குடும்பத்தை பார்த்துக் கொள்வதில் அக்கறை செலுத்தி வந்தார் நடிகை சரிகா. விவாகரத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த அவர், பின்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார். கடைசியாக 2016ம் ஆண்டு வெளியான பார் பார் தேகோ படத்தில் குணசித்ர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், ஓடிடியில் வெளியாக உள்ள ஆந்தாலஜியில் அவர் நடித்துள்ளார்.

ஓடிடிக்கு நன்றி
அமேசான் பிரைமில் மே 13ம் தேதி வெளியாக உள்ள மாடர்ன் லவ் மும்பை (Modern Love: Mumbai) ஆந்தாலஜியில் இடம்பெற்றுள்ள My Beautiful Wrinkles எனும் குறும்படத்தில் நடித்துள்ளார் நடிகை சரிகா. இயக்குநர் அலங்ரிதா ஸ்ரீவத்சவா நல்ல கதையுடன் தன்னை அணுகிய நிலையில், அதில் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறியுள்ளார். மேலும், தியேட்டரை போல ஓடிடியில் நஷ்டம் ஏற்படுவதில்லை என்பதால் ஓடிடி இந்தியாவுக்கு வந்ததற்கு மிகப்பெரிய நன்றி என்றும் அவர் கூறியுள்ளார்.

வயதான நடிகர்களுக்கு அம்மா
நடிகை சரிகா 60 வயதை தாண்டிய நிலையில், தனக்கு அம்மா கதாபாத்திரங்களே பெரும்பாலும் வந்து குவிந்தன. அதனால் தான் நடிப்பதையே விட்டு விட்டேன். என்னை விட 3 வயது குறைந்த நடிகர்களுக்கு நான் அம்மாவா நடிக்கணும்னும் மனசாட்சியே இல்லாமல் கேட்கிறாங்க என்றும், நல்ல கதாபாத்திரம் என்றால் மாம்பழம் விற்கும் பெண்ணாக கூட நடிப்பேன் ஆனால், பெயருக்காக அம்மாவாக நடிக்க மாட்டேன் என அந்த பேட்டியில் புலம்பித் தள்ளி உள்ளார்.
Recommended Video

இளம் வயது நபருடன் காதல்
இந்நிலையில், அமேசான் பிரைமில் வெளியாக உள்ள மாடர் லவ் மும்பை படத்தில் சரிகா என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்த தகவல்களும் வெளியாகி உள்ளன. காதலின் பல பரிமாணங்களை குறிக்கும் விதமாக 6 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பாக இந்த ஆந்தாலஜி உருவாகி உள்ளது. ஓரினச்சேர்க்கை முதல் பல காதல் கதைகள் இடம்பெற்றுள்ள இந்த ஆந்தாலஜியில் இளம் வயது நபருக்கும் சரிகாவுக்கும் ஏற்படும் காதல் கதையில் தான் அவர் நடித்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications











