பல மாற்றங்களுடன் 20 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் கமல் படம்
சென்னை : தனது படங்களில் புதுமைகளை அறிமுகம் செய்வதில் ஆர்வம் கொண்டவர் கமல். நடிப்பில் மிகச் சிறந்த நடிகர் என பெயர் வாங்கிய கமல், தமிழக சட்டசபை தேர்தலில் இந்த ஆண்டு முதல் முறையாக போட்டியிடுகிறார்.
இந்நிலையில் கமல் நடித்த படம் ஒன்று 20 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. 2001 ம் ஆண்டு வெளியான சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமான ஆளவந்தான் படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார்.

இரட்டை வேடங்களில் கமல்
இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியதுடன், இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் கமல். ராணுவ அதிகாரியாகவும், மனநலம் பாதிக்கப்பட்ட அவரின் இரட்டை சகோதரர் என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.

கமல் மீது குற்றச்சாட்டு
இந்த படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு, கமலால் தனக்கு பட்ஜெட்டில் இழப்பு ஏற்பட்டதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார். இதனால் ஆளவந்தான் படத்தின் திரைக்கதையை மாற்றி அமைத்து, ரீ எடிட்டிங் செய்து, வெளியிட நினைத்திருப்பதாக தெரிவித்தார்.

தாணு நம்பிக்கை
திரைக்கதையில் மாற்றம் செய்து வெளியிட்டால் இந்த படம் மிகச் சிறப்பாக ஓடும் எனவும் தாணு நம்பிக்கை தெரிவித்துள்ளார். அப்போது ஏற்பட்ட இழப்பை இப்போது சரி செய்ய முடியும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப புதுமைகள்
தற்போது தலைமுறையினரிடம் இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என்றே கூறப்படுகிறது. ஏனெனில் 20 ஆண்டுகளுக்கு முன் இந்த படத்தில் எந்த மாதிரியான தொழில்நுட்ப புதுமைகளை புகுத்தி இருந்தனர் என தற்போதைய தலைமுறையினர் அறிய வசதியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications











