கமல்ஹாசன் மக்களவை பேச்சு.. சம்பவம் செய்ததாக பாராட்டு.. ப்ளூ சட்டை மாறன் அதிரடி
சென்னை: மக்கள் நீதி மய்யத்தை கடந்த 2018ஆம் ஆண்டு ஆரம்பித்த கமல்ஹாசன் மக்களவைத் தேர்தலில் எல்லாம் போட்டியிட்டார். வெற்றியின் விளிம்பு வரை சென்று தோல்வியை சந்தித்தார். இப்போதும் அரசியலில் ஆக்டிவ்வாக இருக்கும் அவருக்கு கடந்த வருடத்தில்தான் ராஜ்யசபா எம்.பி.சீட் வழங்கப்பட்டது. தொடர்ந்து சினிமாவிலும் பிஸியாக இருக்கும் அவர்; எம்.பியாக தனது உரையை மக்களவையில் பேசினார். அதனை ப்ளூ சட்டை மாறன் பாராட்டியிருக்கிறார்.
அரசியல் பிரவேசம் செய்த கமலுக்கு அங்கு பெரிய வெற்றி இல்லை. அதனையடுத்து மீண்டும் சினிமாவுக்கு வந்த அவர் விக்ரம், இந்தியன் 2, தக் லைஃப் ஆகிய படங்களில் நடித்தார். விக்ரமை தவிர்த்து மற்ற படங்கள் ஓடவில்லை. அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். ரஜினியை வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறார்; அவருடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படி சினிமாவில் படு பிஸியாக இருக்கும் அவர்; அரசியலிலும் கவனத்தை இழக்கவில்லை. திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் அவர்; எம்.பியாக தனது உரையை மக்களவையில் பதிவு செய்தார்.
கமலின் உரை: தனது உரையை நேர்த்தியாக வடிவமைத்திருந்த அவர், "எனக்குத் தமிழை அறிமுகப்படுத்திய ஆசிரியர்களில் ஒருவர் அரசியல் தலைவர் சி.என்.அண்ணாதுரை. 'துரை' என்றால் பிரெஞ்சு மொழியில் அரசன் என்று பொருள். அவர் அரசராகப் பிறக்கவில்லை, ஆனால் தமிழர்களாகிய நாங்கள் அவரை எங்கள் மனங்களில் அரசராக அரியணையில் ஏற்றினோம். எமது மொழி, கலாசாரம் மற்றும் உரிமைகள் மீதான எந்தவொரு ஆக்கிரமிப்பையும் எப்படி எதிர்கொள்வது என்று அவர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.

உங்கள் முன் நிற்கிறேன்: 57 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நான் உங்கள் முன்னால் பேசுகிறேன். 1969 பிப்ரவரி 3ம் தேதி அவர் மறைந்த தினம். எனது சித்தாந்தத்தின் தந்தைகளில் ஒருவரை இழந்த நான் அப்போது 14 வயது சிறுவன். இன்று அவர் பேசிய அதே அவையில் நான் பேசுகிறேன். இது மேடை அச்சம் அல்ல, உணர்ச்சிகளால் நான் நடுங்குகிறேன். எனக்குள் இருக்கும் உணர்ச்சிப் பெருக்கெடுத்து உங்களைத் புண்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே நான் இதையெல்லாம் எழுதி வைத்திருக்கிறேன். இன்று அண்ணாவின் மகனாகவும், காந்தி மற்றும் பெரியாரின் கொள்ளுப் பேரனாகவும் உங்கள் முன் நிற்கிறேன்" என பேசினார்.
நிர்மலாவுக்கு பதிலடி: இதற்கிடையே தமிழ் படித்தால் பிச்சை எடுக்கக்கூட உதவாது என ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னதற்கு, " பிச்சைப் பாத்திரத்தில் இருந்து எடுத்த சில்லறைகள் நவீன காலத்துக்கு உதவாது என்று தெரிந்தவர் நீங்கள். நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகுதான் உங்கள் பிச்சை பாத்திரம் உருவாக்கப்பட்டது. பிச்சை குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரை பார்த்து பிச்சை எடுக்கக்கூட தமிழ் உதவாது என்கிறீர்கள். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே! தமிழ்... பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது.
தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். தங்கச்சி ஓட்டையும் நாட்டையும் இந்த கமலஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன், கருணையுடன் நீங்களே ஏற்பீர். உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ளுங்கள். பகுத்தறிந்த தமிழ்ச் சித்தன் கூற்று இது 'உம் வினை உம்மை சுடுக'. எங்கள் நாடு நீடூழி வாழும், உம் வினை உம்மைச் சுடுக, ஓட்டப்பம் வீட்டைச் சுடுக. 'வந்தீர் வென்றீர் செல்வீர்' இது உலக நியதி, அரசியல் நியதியும்கூட. வீழ்க வளமுடன். தமிழ் என்றும் வாழும் நலமுடன்" என்று பதிலடி கொடுத்தார்.
ப்ளூ சட்டை மாறன் பாராட்டு: கமல்ஹாசனின் இந்த மக்களவை பேச்சு இந்தியா முழுவதும் ட்ரெண்டாகியிருக்கிறது. பலரும் அவருக்கு தங்களது பாராட்டை தெரிவித்துவருகிறார்கள். அந்தவகையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், "ராஜ்யசபா எம்.பி ஆன பிறகு.. தனது முதல் பேச்சில் தமிழுக்கு ஆதரவாக வாள் வீசி சம்பவம் செய்துள்ளார் கமல். இதே மொழிப்பற்றும், வீரமும் தொடரட்டும்" என பாராட்டியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











