கமலோட இந்தியன் 2 அடுத்தக்கட்ட சூட்டிங் எப்ப தெரியுமா.. இதோ அப்டேட்!

சென்னை : கடந்த 1996ம் ஆண்டில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் இந்தியன்.

சேனாபதி என்ற கேரக்டரில் கமல்ஹாசன் இந்தப் படத்தில் மிரட்டியிருந்தார். ஊழலை ஒழிக்கும் இந்தியன் தாத்தா கேரக்டரை ரசிகர்கள் இன்றளவும் கொண்டாடி வருகின்றனர்.

இந்தப் படத்தை ஷங்கர் இயக்கியிருந்த நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது.

கமல்ஹாசனின் இந்தியன் படம்

கமல்ஹாசனின் இந்தியன் படம்

நடிகர் கமல்ஹாசன், சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர், கஸ்தூரி, கவுண்டமணி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 1996ம் ஆண்டில் வெளியான படம் இந்தியன். இந்தப் படத்தின் சுதந்திரப் போராட்டத்திற்காக பாடுபடும் சேனாபதி கேரக்டரில் மிரட்டியிருந்தார் கமல்ஹாசன். மேலும் சந்துரு என்ற கேரக்டரிலும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

மிரட்டிய சேனாபதி கேரக்டர்

மிரட்டிய சேனாபதி கேரக்டர்

இந்தப் படத்தை இயக்குநர் ஷங்கர் டைரக்ட் செய்திருந்த நிலையில், ஊழலுக்கு எதிரான கதைக்களத்தில் படம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது. இந்தப் படத்தில் ஊழலை எதிர்த்து கத்தியை தூக்கும் சேனாபதி, தன்னுடைய மகனாக இருந்தாலும் குற்றம் குற்றமே என அவரை கொலை செய்வதாக படம் முடியும். படத்தின் இசை ஏஆர் ரஹ்மான் கைவண்ணத்தில் அதிகமாக கவர்ந்தது.

இந்தியன் 2 படம்

இந்தியன் 2 படம்

இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்த பாகம் தற்போது உருவாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கிய நிலையில், படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்து காரணமாக படம் முடங்கியது. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திருப்பதியில் அடுத்தக்கட்ட சூட்டிங்

திருப்பதியில் அடுத்தக்கட்ட சூட்டிங்

தற்போது இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். இயக்குநர் ஷங்கர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். அவர் ஒரே நேரத்தில் ராம்சரணின் படம் மற்றும் இந்தியன் 2 படங்களை இயக்கி வருகிறார். இந்நிலையில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் வரும் 22ம் தேதி திருப்பதியில் துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

மீண்டும் திருப்பதியில் சூட்டிங்

மீண்டும் திருப்பதியில் சூட்டிங்

முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் திருப்பதியில் நடைபெற்றது. அப்போது பிரத்யேக மேடையில் தோன்றி ரசிகர்களை சந்தித்து கையசைத்தார் கமல்ஹாசன். இதன் வீடியோ அப்போது வெளியாகி வைரலானது. இந்நிலையில் தற்போது மீண்டும் திருப்பதியில் படத்தின் சூட்டிங் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 வெற்றிப்படம் விக்ரம்

வெற்றிப்படம் விக்ரம்

கடந்த 2019ல் இந்தியன் 2 படத்தின் சூட்டிங் துவங்கிய நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் சூட்டிங் முடங்கியது. இதையடுத்து விக்ரம் படத்தில் கமல்ஹாசன் நடித்து முடித்தார். இந்தப் படம் சர்வதேச அளவில் வெளியாகி அதிகமான வசூலை அவருக்கு ஈட்டித் தந்துள்ளது. இதையடுத்து தயாரிப்பு, நடிப்பு என அவர் பிசியாகியுள்ளார். தற்போது இந்தியன் 2 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X