சேனாபதி ஆன் தி வே.. அடுத்த வாரத்தில் துவங்குகிறதா இந்தியன் 2 படம்?.. கமல் கொடுத்த ஹின்ட்!

சென்னை : நடிகர் கமல் -இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தப் படம் இந்தியன். இந்தப் படத்தில் சுதந்திர போராட்ட வீரராக நடித்திருந்தார் கமல்.

Recommended Video

Blue சட்டை அணிந்து வந்து Blue Sattai Maran-னை வெளுத்து வாங்கிய Perarasu

நாட்டில் நிலவும் லஞ்சத்தை களையெடுக்க கிளம்பும் சேனாபதி, ஒரு கட்டத்தில் தன்னுடைய மகனும் அந்த லிஸ்டில் இருப்பதை பார்த்து மகனென்றும் பார்க்காமல் அவரையும் தீர்த்துக் கட்டுவார்.

அந்த வகையில் தற்போது இந்தியன் 2 படம் மீண்டும் சூட்டிங் துவங்கப்பட்டு சில தவிர்க்க முடியாத காரணங்களால் நிறுத்தப்பட்டது.

இந்தியன் படம்

இந்தியன் படம்

நடிகர் கமல்ஹாசன், சுகன்யா, மனீஷா கொய்ராலா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 1996ல் வெளியானது இந்தியன் படம். இந்தப் படத்தை பிரம்மாண்டமாக இயக்கியிருந்தார் இயக்குநர் ஷங்கர். அவரது பாணியில் சிறப்பான கதை மற்றும் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. ஏஎம் ரத்தினம் படத்தை தயாரித்திருந்தார்.

லஞ்சம் வாங்கும் கமல்

லஞ்சம் வாங்கும் கமல்

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு, நாடு சுதந்திரம் பெற்றபின்பு திருமணம் செய்துக் கொள்ளும் கமல் -சுகன்யாவிற்கு கமல் மற்றும் கஸ்தூரி பிறக்கின்றனர். அழகான இந்தக் குடும்பத்தில் தன்னுடைய வளர்ச்சிக்கு தடையாக தன்னுடைய அப்பாவின் கொள்கைகள் இருப்பதை பார்த்து வெளியில்வரும் கமல் லஞ்சம் வாங்குகிறார்.

களையெடுக்கும் கமல்

களையெடுக்கும் கமல்

இதனால் பள்ளிக் குழந்தைகள் உயிரிழப்பிற்கும் காரணமாகிறார். இதனிடையே தாங்கள் போராடி பெற்ற சுதந்திரத்தை குலைக்கும் லஞ்சத்தை, லஞ்சம் பெறுபவர்களை களையெடுக்க களமிறங்கும் அப்பா கமலுக்கு இது தெரியவருகிறது. அவர் தன்னுடைய மகன் என்றும் பார்க்காமல் அவரையும் களையெடுக்கிறார்.

இருதரப்பு நியாயங்கள்

இருதரப்பு நியாயங்கள்

இருதரப்பு கமலுக்கும் அவர்களது தரப்பு நியாயங்களை முன்வைத்து இந்தப் படம் வெளியானது. இளைய கமலுக்கு மனிஷா கொய்ராலாவுடன் அழகான காதலும் காட்சிப்படுத்தப்படுகிறது. ஏஆர் ரஹ்மான் இசையில் டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா, பச்சைக்கிளிகள் போன்ற படத்தின் அனைத்துப் பாடல்களும் மிகுந்த வரவேற்பை பெற்றன.

இந்தியன் 2 படம்

இந்தியன் 2 படம்

இதனிடையே இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூட்டிங் துவங்கப்பட்டு தவிர்க்க முடியாத காரணங்களால் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ராம்சரணின் ஆர்சி15 படத்தை இயக்கத் துவங்கினார் ஷங்கர். இதனிடையே இந்தியன் 2 படத்தின் பிரச்சினைகள் களையப்பட்டு மீண்டும் சூட்டிங் துவங்கவுள்ளது.

காஜல் அகர்வால் அப்டேட்

காஜல் அகர்வால் அப்டேட்

இதுகுறித்து கடந்த வாரத்தில் அப்டேட் தெரிவித்த காஜல் அகர்வால் சூட்டிங்கில் பங்கேற்பதற்காக கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை வந்த வீடியோவையும் பகிர்ந்தார். இந்நிலையில் அடுத்த வாரத்தில் இந்தியன் 2 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

 முதலில் இந்தியன் 2 தான்

முதலில் இந்தியன் 2 தான்

இயக்குநர் ஷங்கர் முதலில் இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு, பின்பு ஆர்சி15 படத்தில் மீண்டும் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டிலேயே இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு மத்தியில்தான் ராம்சரணின் இந்தப் படம் நிறைவடையும் என்று தற்போது கூறப்படுகிறது.

கமல் பிறந்தநாள் ட்வீட்

கமல் பிறந்தநாள் ட்வீட்

இதனிடையே இன்றைய தினம் ஷங்கரின் பிறந்தநாளையொட்டி நடிகர் கமல் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இதில் இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம், இணைந்தே இன்னும் பல சாதனைகளை செய்வோம் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அடுத்த சில மாதங்களுக்கு இருவரும் இணையவுள்ளது குறிப்பாக உணர்த்தப்பட்டுள்ளது.

விரைவில் அப்டேட்

விரைவில் அப்டேட்

இதனிடையே இந்தியன் 2 படத்தின் வேலைகள் மற்றும் சூட்டிங் உள்ளிட்ட நடைமுறைகளுக்காக தற்போது அமெரிக்காவில் உள்ள கமல், விரைவில் அதை முடிப்பார் என்றும் தொடர்ந்து இந்தப் படத்தின் சூட்டிங் அப்டேட் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X