twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தியன் 2 விபத்து... தொழிலாளர்களின் இன்சூரன்ஸை மதிக்கிறதா சினிமா நிறுவனங்கள்?

    By
    |

    Recommended Video

    Indian 2 Shooting Spot Incident detailed | EVP Film City | Director Shankar | Kamal Hassan

    சென்னை: இந்தியன் 2 படத்தில் ஏற்பட்ட விபத்தை அடுத்து தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்தும் இன்சூரன்ஸ் குறித்தும் இப்போது கேள்வி எழுந்துள்ளது.

    கமல் நடிக்கும் 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இதில், காஜல் அகர்வால், ரகுல் பிரீத்சிங், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர்.

    இதன் ஷூட்டிங் நசரத்பேட்டை அருகேயுள்ள, ஈவிபி பிலிம் சிட்டியில் செட் அமைத்து நடந்து வந்தது.

     3 பேர் பரிதாப பலி

    3 பேர் பரிதாப பலி

    நேற்று முன்தினம் இரவு, 9.40 மணியளவில் சண்டைக் கலைஞர்கள் மற்றும் அரங்கம் அமைப்பவர்கள் பணியில் இருந்தனர். ராட்சத கிரேன்களில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு கொண்டிருந்தபோது, திடீரென கிரேன் அறுந்து விழுந்ததில், உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் அசிஸ்டென்ட் சந்திரன் (60), புரொடக்‌ஷன் அசிஸ்டென்ட் மதுசூதனன் (29) ஆகியோர் உயிரிழந்தனர்.

    சினிமா இன்சூரன்ஸ்

    சினிமா இன்சூரன்ஸ்


    இதையடுத்து தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்தும் இன்சூரன்ஸ் குறித்தும் கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது, சில பெரிய நிறுவனங்கள் படம் பண்ணும்போது இன்சூரன்ஸ் செய்துகொள்கின்றன. ஆனால், பல நிறுவனங்கள் இதைக் கண்டு கொள்வதில்லை என்று கூறப்படுகிறது. இந்தியில் பெரும்பலான படங்கள் இன்சூரன்ஸ் செய்யப்பட்டே படமாக்கப்படுகின்றன.

    பாதுகாப்புக்கு

    பாதுகாப்புக்கு

    இதற்காக திரைப்பட இன்சூரன்ஸ் என்ற தனி பிரிவு இருக்கிறது. தொழிலாளர்கள் இழப்பீட்டுக் கொள்கை திட்டத்தின் அடிப்படையில் அவர்கள் இன்சூர் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஷூட்டிங் நடந்து முடியும் வரையோ அல்லது பல்வேறு இடங்களில் நடக்கும்போதோ தொழிலாளர்கள் பாதுகாப்புக்கு என பல இன்சூரன்ஸ் திட்டங்கள் இருக்கின்றன என்கிறார்கள். வயது, தொழில் அடிப்படையில் அதை செய்துகொள்ள வேண்டும்.

    இன்சூர் செய்யப்பட்டுள்ளது

    இன்சூர் செய்யப்பட்டுள்ளது

    அதனடிப்படையில் இந்தியன் 2 செட்டில் பணியாற்றிய தொழிலாளர்கள் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு இழப்பீடு கிடைக்கும். இந்நிலையில் 'இந்தியன் 2' படம் இன்சூர் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    உயிரிழந்தவர்களுக்கு இந்த காப்பீட்டின் மூலம் ரூ.10 லட்சம் வரை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    English summary
    Lyca has said that, Indian-2 was insured, the family of the decesed would get Rs.10 lac each.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X