Kamal Hassan: ஜூலையில் மெகா அப்டேட்... லியோ விஜய்க்கு டஃப் கொடுக்கும் கமல்ஹாசன்... இனி மஜா தான்!

சென்னை: கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2, ப்ராஜெக்ட் கே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதில் பிரபாஸின் ப்ராஜக்ட் கே படத்தில் கமல் இணைந்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து H வினோத், மணிரத்னம் இயக்கும் படங்களில் நடிக்கவுள்ளார் கமல்.
இதில் கமல்ஹாசன் - H வினோத் இணையும் படம் குறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

விஜய்க்கு டஃப் கொடுக்கும் கமல்ஹாசன்:திரையுலகின் ஒன் அன்ட் ஒன்லி உலக நாயகனான கமல், விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு படுபிஸியாக காணப்படுகிறார். ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தை நிறைவு செய்யும் கமல், அடுத்து பிரபாஸுடன் ப்ராஜக்ட் கே படத்தில் கமிட்டாகியுள்ளார். இதனால் கமல் ரசிகர்கள் செம்ம உற்சாகமாக காணப்படுகின்றனர்.

இந்தியன் 2, ப்ராஜக்ட் கே படங்களைத் தொடர்ந்து மேலும் இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார் கமல். அதில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் KH 234 படத்தின் அப்டேட் கடந்தாண்டு கமல் பிறந்தநாளில் வெளியானது. இன்னொரு படத்தை அஜித்தின் ஃபேவரைட் இயக்குநர் H வினோத் இயக்கவுள்ளார். கமலின் 233வது படமாக உருவாகும் இதில் விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

 Kamal Haasan’s KH 233 Announcement Is Expected To Be Released With A Glimpse Video

ஆனாலும், இதுவரை இப்படத்தின் அபிஸியல் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. அதேநேரம் KH 233 படத்தின் அபிஸியல் அப்டேட்டை செம்ம மாஸ்ஸாக வெளியிட கமல் பிளான் செய்துள்ளாராம். அதன்படி, KH 233 அபிஸியல் அப்டேட்டை ஜூலை மாதம் கிளிம்ப்ஸ் வீடியோவாக வெளியிட உள்ளார்களாம். அதில், படத்தின் டைட்டில் கமலுடன் நடிக்கும் நடிகர்கள் உட்பட மற்ற அறிவிப்புகள் இடம்பெறும் என தெரிகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தின் அபிஸியல் அப்டேட்டும் கிளிம்ப்ஸ் வீடியோவுடன் தான் வெளியானது. அதேபோல், விஜய் நடித்து வரும் லியோ பட அப்டேட்டும் கிளிம்ப்ஸ் வீடியோவாக வெளியானது. இது சக்சஸானதால் அடுத்தடுத்து மற்ற படங்களின் அப்டேட்டும் கிளிம்ப்ஸ் வீடியோவுடன் வெளியாகி வருகிறது. அதே பார்முலாவில் தனது 233வது பட அப்டேட்டையும் வெளியிட உள்ளாராம் கமல்.

இதனிடையே KH 233 படத்தில் விஜய் சேதுபதி தான் ஹீரோ என்றும், கமல் கேமியோ ரோலில் தான் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. லால் சலாம் படத்தில் ரஜினியும் கேமியோ ரோலில் தான் நடித்து வருகிறார். விவசாயத்தை பின்னணியாக வைத்து உருவாகவுள்ள KH 233 படத்தில் மறைந்த மாமேதை நம்மாழ்வார் போன்ற ஒரு பாத்திரத்தில் கமல் நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X