»   »  லண்டன் பட விழாவில்.. "தென் பாண்டிச் சீமையிலே.. தேரோடும் வீதியிலே"

லண்டன் பட விழாவில்.. "தென் பாண்டிச் சீமையிலே.. தேரோடும் வீதியிலே"

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: தமிழ் மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம் பிடித்த கமல்ஹாசனின் நாயகன் திரைப்படம், லண்டனில் நடைபெரவுள்ள பக்ரி பவுண்டேஷன் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.

மணிரத்தினத்தின் முத்தான படங்களில் முக்கியப் படம் நாயகன். கமல்ஹாசன், சரண்யா, நாசர், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரின் பண்பட்ட நடிப்பால் உருவாகி வெளியாகி வரலாறு படைத்த படம் இது.

இப்படத்திற்காக கமல்ஹாசன் சிறந்த நடிகர் விருது பெற்றார். இளையராஜாவின் இசையில் வெளியான அத்தனை பாடல்களும் மக்களை உருக வைத்தது. இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறு.

Kamal Haasan's Nayagan in London Indian Film Festival

இந்த நிலையில் நாயகன் திரைப்படம், லண்டனில் நடைபெறவுள்ள பக்ரி பவுண்டேஷன் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. ஜூலை 14ம் தேதி முதல் 24ம் தேதி வரை இந்தப் பட விழா நடைபெறும். இதில் கமல்ஹாசனும் கெளரவிக்கப்படவுள்ளார்.

இந்தப் படவிழாவில் இந்தியா தவிர இலங்கை, நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாட்டுப் படங்களும் திரையிடப்படவுள்ளது. மேலும் கமல்ஹாசனுடன் ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

English summary
Kamal Haasan will take part in an interactive session with film enthusiasts at the 7th edition of Bagiri Foundation London Indian Film Festival, to be held at London between 14th to 24th July. This festival is touted as Europe's largest South Asian Film Festival.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil