பிக் பாஸ் சீசன் 5க்கு சிங்கம் மாதிரி ரெடியாகி வந்த கமல்; வைரலாகும் புரமோ ஷூட்டிங் புகைப்படங்கள்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 5 வேலைகள் போன நான்காவது சீசனை போலவே படு ரகசியமாக நடைபெற்று வருகிறது.

கடந்த சீசனில் எத்தனை பேர் கலந்து கொள்கின்றனர் என்கிற தகவல் முதல் ஏகப்பட்ட ரகசியங்கள் கசிந்து அதன் சுவாரஸ்யமே கெட்டுப் போனது.

இந்த சீசனில் பெரும்பாலும் ரகசியத்தை காப்பாற்ற பிக் பாஸ் சீசன் 5 டீம் முயற்சி செய்து வந்த நிலையில், கமல்ஹாசனின் புரமோ வீடியோ ஸ்டில்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

சிம்பு இல்லை

சிம்பு இல்லை

கமல்ஹாசன் அரசியல் மற்றும் சினிமாவில் பிசியாக இருப்பதால் 4வது சீசனுடன் வர மாட்டார் அடுத்த சீசனை நடிகர் சிம்பு தொகுத்து வழங்குவார் போன்ற ரூமர்கள் எல்லாம் பரவி வந்த நிலையில், அனைத்திற்கும் முற்றுப் புள்ளி வைக்கும் அளவுக்கு 5வது சீசன் புரமோ ஷூட்டிங்கில் கலந்து கொண்ட கமல்ஹாசனின் புகைப்படங்கள் கசிந்துள்ளன.

சிங்கம் போல

சிங்கம் போல

கரு மஞ்சள் நிற கோட் அணிந்து சும்மா கெத்தா சிங்கம் போல நின்றபடி உலகநாயகன் கொடுத்துள்ள போஸ் போட்டோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. பிக் பாஸ் தமிழ் கமல் இல்லாமல் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் செல்லுபடி ஆகாது என்பதை விஜய் டிவி மற்றும் பிக் பாஸ் குழு நன்றாகவே புரிந்து வைத்துக் கொண்டு மீண்டும் அவரையே தொகுப்பாளராக களமிறக்கி இருக்கிறது.

வீடு எப்படி இருக்கு

வீடு எப்படி இருக்கு

பிக் பாஸ் வீடு ஒவ்வொரு வருடமும் சில பல மாற்றங்களுடன் உருவாகி வரும் இந்த ஆண்டு எந்த எந்த மாற்றங்களுடன் பிக் பாஸ் வீடு உருவாகி வருகிறது என்கிற ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு ஜெயில் மாற்றப்பட்டு கண்ணாடி அறையாக மாறிய நிலையில், இந்த ஆண்டு அது மாறுமா? அல்லது அப்படியே இருக்குமா? என்பதை காணவும் ரசிகர்கள் ஆர்வம். பிக் பாஸ் வீட்டின் சில புகைப்படங்களும் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன.

போட்டியாளர்கள் பட்டியல்

போட்டியாளர்கள் பட்டியல்

குக் வித் கோமாளி பிரபலம் கனி, அசீம் கான், நகுல், பவித்ரா, சாம் விஷால் உள்ளிட்ட விஜய் டிவி செல்லப் பிள்ளைகளே இந்த முறையும் பிக் பாஸ் சீசன் 5ல் அதிகளவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் போட்டியாளர்கள் பட்டியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி

பிள்ளையார் சுழி போட்டு பிக் பாஸ் சீசன் 5ஐ ஆரம்பிக்க விஜய் டிவி திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை அன்று கமல்ஹாசன் ஆடிப் பாடி வசனம் பேசி மக்களை கவரும் பிக் பாஸ் சீசன் 5 புரமோ புதிய லோகோவுடன் அறிமுகமாக உள்ளது. இந்த முறை யாருடைய மாஸ்க் எல்லாம் அவிழ போகிறதோ வெயிட் பண்ணி பார்ப்போம்.

காரைக்குடியில் ஷூட்டிங்

காரைக்குடியில் ஷூட்டிங்

பிக் பாஸ் புரமோவுக்காக சென்னைக்கு ஷூட்டிங் வந்த கமல்ஹாசன் அடுத்ததாக விக்ரம் படப்பிடிப்புக்காக காரைக்குடி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் லோகேஷ் கனகராஜின் கைதி படத்தில் நடித்த நடிகர் நரேன் மற்றும் ஷிவானி நாராயணன் உள்ளிட்டோர் விக்ரம் படத்தில் இணைந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு செம ஸ்பீடில் நடைபெற்று வருகிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X