எனக்கு அது சுவாசம்.. ப்ரோமோ வரும் நாளில் கமல்ஹாசன் சொல்லியிருக்கும் சூப்பர் வாழ்த்து
சென்னை: கமல்ஹாசன் இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர். அவரை பார்த்து பிரமிக்காதவர்களே இல்லை. இடையில் அரசியலுக்கு சென்றதால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர்; விக்ரம் படத்தில் நடித்து தரமான கம்பேக் கொடுத்தார். தொடர்ந்து இந்தியன் 2, தக் லைஃப் படங்களில் நடித்த அவர்; 40 வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த்துடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன் சிறு வயதிலிருந்தே நடித்து வருபவர். நடிப்பு மட்டுமின்றி திரைத்துறையில் இருக்கும் பெரும்பாலான விஷயங்களை கற்றுக்கொண்டு தனக்கென தனி பாதை அமைத்து பயணித்து வருபவர். ஃபுல் ஃபார்மில் நடித்துக்கொண்டிருந்த அவர்; அரசியல் களத்துக்கு சென்றதால் சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கும் சூழல் நிலவியது. பிறகு மீண்டும் சினிமாவுக்கு வந்த அவர்; விக்ரம் படத்தில் நடித்து மெகா ப்ளாக் பஸ்டரை கொடுத்தார். அப்படத்திலிருந்து மீண்டும் பழைய கமலாக திரைத்துறையில் இயங்க ஆரம்பித்துவிட்டார்.

ரஜினிகாந்த்துடன் படம்: விக்ரமுக்கு பிறகு அவர் நடித்த இந்தியன் 2, தக் லைஃப் படங்கள் மோசமான தோல்வியை சந்தித்தன. அது அவரது ரசிகர்களுக்கு பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியது. அந்த இரண்டு படங்களின் தோல்விகளுக்கு அவர் நடிக்கப்போகும் அடுத்த படங்களில் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார்கள் விண்வெளி நாயகனின் ரசிகர்கள். குறிப்பாக ரஜினியுடன் இணைந்து நடிக்கும் படத்தின் மீது எதிர்பார்ப்பு வானளவு இருக்கிறது. இன்று மதியம் 12.07 மணிக்கு அப்படத்தின் ப்ரோமோ வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ரஜினியை வைத்து ஒரு படத்தையும் தயாரிக்கிறார்.
மொழி மீது பற்று: இதற்கிடையே கமல்ஹாசனுக்கு தமிழ் மொழி மீது மிகப்பெரிய பற்று இருக்கிறது. பாடல்கள், கவிதைகளை எல்லாம் மிகச்சிறப்பாக எழுதக்கூடியவர். அதேபோல் கமல்ஹாசன் போல் தமிழ் மொழியை நடிகர்களில் சரியாகவும், சிறப்பாகவும் உச்சரிப்பவர்கள் வேறு யாருமே இல்லை. அவரது நடிப்புக்கு எப்படி அனைவருமே ரசிகர்களாக இருக்கிறார்களோ அதேபோல் அவர் எழுதிய பாடல்களுக்கும், கவிதைகளுக்கும் ரசிகர்களாக இருக்கிறார்கள்.
கமல்ஹாசன் ட்வீட்: இந்நிலையில் இன்று தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி பலரும் தமிழின் சிறப்புகளை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்திவருகிறார்கள். கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், "மரபணுவில் உருவாகி, தாய்ப்பாலில் உணவாகி, செவிப்பொறியில் ஒலியாகி உடலுக்குள் உயிராகி நிற்பது என் தாய்மொழி. அடிபட்டால் அரற்றவும், உறக்கத்தில் உளறவும், சிரமப் பொழுதுகளில் சிந்தித்திருக்கவும் எனக்குச் சொல்லாகி வருவது தமிழ்.
தமிழர்களை வாழ்த்துகிறேன்: அவரவர் தாய்மொழி அவரவர் வாழ்வு. எனக்கென் தாய்மொழி என்றென்றும் என் சுவாசம். மொழியால் உருவானேன். மொழிவதால் வாழ்கின்றேன். தாய்மொழி நாளில் தமிழர்களை வாழ்த்துகிறேன்" என குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த பதிவு ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications