கழற்றிவிட்ட அஜித்.. வாய்ப்பு கொடுத்த கமல்?.. விக்னேஷ் சிவன் அடுத்த பிளான் என்ன?

சென்னை: ஏகே 62விலிருந்து விக்னேஷ் சிவன் கழற்றிவிடப்பட்ட அவரது அடுத்தக்கட்ட பிளான் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தனது 62ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித். அதுகுறித்து வெளியான அறிவிப்பில் ஏகே 62 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் என்றும், விக்னேஷ் சிவன் இயக்குவார் அனிருத் இசையமைப்பார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஏகே 62விலிருந்து கழற்றிவிடப்பட்ட விக்னேஷ் சிவன்

ஏகே 62விலிருந்து கழற்றிவிடப்பட்ட விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் சொன்ன ஒன்லைன் ஆரம்பத்தில் பிடித்துப்போக அடுத்ததாக அவர் சொன்ன முழு கதையும் திருப்தி அளிக்காததால் ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் கழற்றிவிடப்பட்டார். இதனையடுத்து ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்கவிருக்கிறார். ஆனால் அதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையே விக்னேஷ் சிவன் கழற்றிவிடப்பட்டதால் இது தனக்கு நேர்ந்த மிகப்பெரிய அவமானமாக விக்கி நினைக்கிறார் என பேச்சு எழுந்திருக்கிறது.

விக்னேஷ் சிவனின் அடுத்தக்கட்ட பிளான்?

விக்னேஷ் சிவனின் அடுத்தக்கட்ட பிளான்?

இதனையடுத்து விக்னேஷ் சிவன் ஒரு படம் இயக்கி அதனை ஹிட்டாக்கி தன்னை கோலிவுட்டுக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதனால் சிறந்த கதையை தயார் செய்யும் பணியில் தற்போது அவர் இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் அந்தப் படத்தை யாரை வைத்து இயக்குவது என்ற குழப்பத்தில் இருந்ததாகவும், முதலில் விஜய் சேதுபதியிடம் சென்று தனது அடுத்த கதையில் நடிப்பதற்கு கால்ஷீட் கேட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் விஜய் சேதுபதி நடிப்பதற்கு தயக்கம் காட்டியதாகவும் சொல்லப்பட்டது.

நயனை இயக்குகிறாரா விக்னேஷ் சிவன்?

நயனை இயக்குகிறாரா விக்னேஷ் சிவன்?

விஜய் சேதுபதியும் டீலில் விட நயன்தாராவை வைத்து படம் இயக்க அவர் திட்டமிட்டு கதாநாயகியை மையப்படுத்தி கதையை தயார் செய்ய ஆரம்பித்திருக்கிறார் என பேச்சு எழுந்தது. ஆனால், பெரிய ஹீரோ படத்திலிருந்து கழற்றிவிடப்பட்டதால் இன்னொரு ஹீரோவை வைத்து ஹிட் கொடுத்தால்தான் இண்டஸ்ட்ரியில் மதிப்பு இருக்கும் என நினைத்ததால் அந்தத் திட்டத்தை பாதியிலேயே கைவிட்டுவிட்டார் எனவும் சிலர் பேசினர்.

பிரதீப் ரங்கநாதனை இயக்கும் விக்னேஷ் சிவன்?

பிரதீப் ரங்கநாதனை இயக்கும் விக்னேஷ் சிவன்?

இப்படிப்பட்ட சூழலில் லவ் டுடே படத்தில் நடித்து சென்சேஷ்னல் ஆன பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம். இது சிவகார்த்திகேயனுக்காக எழுதப்பட்ட கதை எனவும், அந்தப் படத்தின் பணிகள் சில காரணங்களால் ஆரம்பிக்கப்படவில்லை என தெரிகிறது. மேலும் இந்தப் படம் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டாக இருக்கலாம் என சொல்லும் கோடம்பாக்கத்தினர் மற்றொரு ஹீரோவை தேடும் படலத்தில் விக்கி இருப்பதாக கூறுகின்றனர்.

கமல் ஹாசனுடன் கூட்டணி அமையும் விக்னேஷ் சிவன்?

கமல் ஹாசனுடன் கூட்டணி அமையும் விக்னேஷ் சிவன்?

இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்கும் படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக புது தகவல் ஒன்று உலாவுகிறது. படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 45 கோடி ரூபாய்வரை வரும் எனவும்; தயாரிப்பில் மீண்டும் மும்முரமாக இறங்கியிருக்கும் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் இந்தப் படத்தை தயாரித்தால் நிச்சயம் விக்னேஷ் சிவனுக்கு நல்லதுதான் எனவும் பேசப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X