பிரேமம் டைரக்டருக்கு கமலின் பதில்...ட்விட்டரில் டிரெண்டிங்

சென்னை : நடிகர் கமல், டைரக்டர் லோகேஷ் கனகராஜுடன் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தசாவதாரம் படம் ரிலீசாகி 13 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு அப்படத்தில் தான் நடித்த கேரக்டர்கள் பற்றியும், அந்த படத்தின் அனுபவங்கள் பற்றியும் இன்ஸ்டாகிராமில் கமல் கருத்து பதிவிட்டிருந்தார்.

கமலிடம் பிரேமம் டைரக்டர் கேள்வி

இதனை பார்த்த பிரேமம் பட டைரக்டர் அல்ஃபோன்ஸ் புத்திரன், கமல் சார், மைக்கேல் மதன காமராஜன் பட ஷாட்களை எப்படி எடுத்தீர்கள் என சொல்ல முடியுமா. தசாவதாரம் பட இயக்கத்தில் பிஎச்டி. மைக்கேல் மதன காமராஜன் டிகிரி கோர்ஸ் மாதிரி என பாராட்டி இருந்தார்.

கமலிடம் பிரேமம் டைரக்டர் கேள்வி

கமலிடம் பிரேமம் டைரக்டர் கேள்வி

இதனை பார்த்த பிரேமம் பட டைரக்டர் அல்ஃபோன்ஸ் புத்திரன், கமல் சார், மைக்கேல் மதன காமராஜன் பட ஷாட்களை எப்படி எடுத்தீர்கள் என சொல்ல முடியுமா. தசாவதாரம் பட இயக்கத்தில் பிஎச்டி. மைக்கேல் மதன காமராஜன் டிகிரி கோர்ஸ் மாதிரி என பாராட்டி இருந்தார்.

கமல் அளித்த பதில்

கமல் அளித்த பதில்

அல்ஃபோன்ஸ் புத்திரனின் பதிவிற்கு கமல் தற்போது பதிலளித்துள்ளார். அதில், நன்றி அல்ஃபோன்ஸ் புத்திரன். சீக்கிரம் செய்கிறேன். நீங்கள் அதிலிருந்து எவ்வளவு கற்றுக் கொண்டீர்கள் என எனக்கு தெரியவில்லை. என்னை பொறுத்தவரை அதை மாஸ்டர் கிளாஸ் என்றே குறிப்பிட்டுள்ளேன். இத்தனை ஆண்டுகள் கழித்து அந்த படங்களை பற்றி பேசுவது எனக்கு புதிய பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

30 ஆண்டுகளை கடந்த மைக்கேல் மதன காமராஜன்

30 ஆண்டுகளை கடந்த மைக்கேல் மதன காமராஜன்

மைக்கேல் மதன காமராஜன் படம் 1990 ம் ஆண்டு வெளியானது. சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கிய இந்த படத்திற்கு கமலஹாசன் திரைக்கதை எழுதி இருந்தார். கிரெஸி மோகன் வசனம் எழுதி இருந்தார். இந்த படத்தில் கமல் 4 வேடங்களில் நடித்திருந்தார். அல்ஃபோன்ஸ் புத்திரனின் கேள்விக்கு கமல் அளித்த பதில் டிரெண்டிங் ஆகி உள்ளது.

முழு நீள காமெடி படம்

முழு நீள காமெடி படம்

அவருடன் மனோரமா, டெல்லி கணேஷ், நாகேஷ், குஷ்பு,ரூபினி, ஊர்வசி, நாசர், சந்தான பாரதி என நட்சரத்திர பட்டாளமே நடித்திருக்கும். முழுக்க முழுக்க காமெடி படமக இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X