ஸ்டாலினுக்கு ஆறுதல்.. விஜய்க்கு வாழ்த்து.. கமல் டபுள் ரோலில் கலக்குறாரேனு கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் 2026 வாக்கு எண்ணும் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்படி இருக்கையில், 100க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக முன்னிலை வகித்து வரும் நிலையில் தவெக தலைமையிலான ஆட்சிதான் தமிழ்நாட்டில் என்று கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. பலரும் தவெகவுக்கும் விஜய்க்கும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், முதலமைச்சர் ஸ்டாலினின் தோல்விக்கும் விஜய்யின் வெற்றிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதாவது, " ஜனநாயக அரசியலில் தேர்தல் ஓர் அங்கம்தான். அருமை நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வெற்றியில் ஆர்ப்பரிப்பவரும் அல்ல. தோல்வியில் துவள்பவரும் அல்ல. மீண்டும் போராடுவார். மீண்டும் வெல்வார்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவானது பலரது கவனத்தை ஈர்த்தது.
விஜய்: அதேபோல், " தங்களுடைய முதல் தேர்தலிலேயே மக்களுடைய நம்பிக்கையைப் பெற்று பெரு வெற்றி பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கும், அவரது கட்சியினருக்கும் என்னுடைய பாராட்டுகள். மக்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

டபுள் ரோல்: இவரது இந்த பதிவைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் கமல்ஹாசன் ஒரு பக்கம் ஸ்டாலினுக்கு ஆறுதல் தெரிவிக்கிறார், மறுபுறம் விஜய்க்கு வாழ்த்தும் தெரிவிக்கிறாரே டபுள் ரோலில் கலக்குறாரே என்று கமல்ஹாசனைக் கலாய்த்து வருகிறார்கள். அதே நேரத்தில் கமலஹாசன் சரியான அரசியல் மாண்புடன் நடந்து கொண்டு இருக்கிறார், அவை சிலருக்குப் புரியாது என்று பதில் அளித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications