பகபகபகபக..... கமலின் ‘உத்தம வில்லன்’ பர்ஸ்ட் லுக் வெளியானது!

சென்னை: ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடிக்கும் உத்தம வில்லன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

விஸ்வரூபம் 2 பட வேலைகளே இன்னும் முடிவடையாத நிலையில் உத்தம வில்லனின் படப்பிடிப்பு தாமதமாகத் தொடங்கும் என்றே சொல்லப்பட்டது. ஆனால் உத்தம வில்லன் படத்தின் கதை, திரைக்கதையை முடித்த கமல் படத்தின் லொகேஷன்களையும் இந்தியா முழுக்க பயணம் செய்து முடிவு செய்தார்.

இந்நிலையில் தற்போது அப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு, எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

படப்பிடிப்புத் தொடக்கம்...

படப்பிடிப்புத் தொடக்கம்...

நாளை முதல் உத்தம வில்லன் படப்பிடிப்பு பெங்களூரில் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தை கமலும் லிங்குசாமியும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

உத்தம புத்திரன்...

உத்தம புத்திரன்...

பர்ஸ்ட் லுக்கில் கமலின் அலங்காரம் செய்யப்பட்ட முகமும், டைட்டிலும் உள்ளது. மேலும், கமல், லிங்குசாமி இணைந்து வழங்கும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

பகபகபகபக...

பகபகபகபக...

‘பகபகபகபக...' என்ற பிண்ணனி இசையுடன் தோன்றுகிறது கமலின் வர்ணங்கள் தீட்டப்பட்ட முகம். முதலில் மூடிய வண்ணம் உள்ள கண்கள் பிறகு திறக்கின்றன.

பவர் புல் கண்கள்...

பவர் புல் கண்கள்...

அப்படியே முகத்தை ஜூம் செய்து கண்களுக்குள் காட்சி காணாமல் போகிறது. கமலின் முகம் முழுவதும் முகமூடி போன்று ஓவியமாக வரையப்பட்டுள்ளது.

வில்லும், அம்புமா....

வில்லும், அம்புமா....

படத்தின் டைட்டிலில் வில்லிசைப் பாடலுக்குப் பயன்படுத்துவார்களே அதுபோன்ற அலங்காரம் செய்யப்பட்ட வில் போன்ற அமைப்பில் ‘உத்தம' வார்த்தை வடிவமைக்கப் பட்டுள்ளது.

3 நாயகிகள்...

3 நாயகிகள்...

இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். கடைசியாகக் கிடைத்தத் தகவலின் படி விஸ்வரூபத்தில் நடித்த ஆண்ட்ரியா, பூஜா குமார் மற்றும் ‘பூ' பார்வதி எனச் சொல்லப் படுகிறது.

எகிறும் எதிர்பார்ப்பு...

எகிறும் எதிர்பார்ப்பு...

படத்தின் டைட்டிலும் அலங்காரம் செய்யப்பட்ட முகமும் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இசை...

இசை...

விஸ்வரூபம் படத்திற்கு இசையமைத்த ஜிப்ரானே இப்படத்திற்கும் இசை. படத்தின் ஒளிப்பதிவு ஷ்யாம் தத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X