RRR, KGF-ஐ அடித்துத் தூக்கிய கமலின் விக்ரம்.. IMDB ரேட்டிங்கில் இந்த ஆண்டு நம்பர் ஒன் இதுதான்!
சென்னை: வசூலில் இயக்குநர் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் மற்றும் நடிகர் யஷ்ஷின் கேஜிஎஃப் 2 திரைப்படம் ஆயிரம் கோடியை கடந்திருந்தாலும், இந்த ஆண்டின் சிறந்த படம் என்கிற IMDB லிஸ்ட்டில் முதலிடத்தை பிடித்துள்ளது கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம்.
விஷ்ணு விஷாலின் ராட்சசன், சூர்யாவின் சூரரைப் போற்று, ஜெய்பீம் உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்கள் IMDB ரேட்டிங்கில் சிறந்த படங்கள் பட்டியலில் இடம்பெற்று இதற்கு முன்னதாக மாஸ் காட்டி உள்ளன.
இந்நிலையில், இதுவரை வெளியான படங்களில் IMDBல் டாப் 10 இடத்தைப் பிடித்துள்ள இந்திய படங்களின் லிஸ்ட்டை இங்கே காண்போம்.

10. சாம்ராட் பிருத்விராஜ்
அக்ஷய் குமார், சஞ்சய் தத், மானுஷி சில்லர் நடிப்பில் விக்ரம் படத்துக்கு போட்டியாக இந்த ஆண்டு வெளியான சாம்ராட் பிருத்விராஜ் திரைப்படம் IMDBல் 7.0 ரேட்டிங் உடன் இந்த டாப் 10 பட்டியலில் 10வது இடத்தை பிடித்து இருக்கிறது. மன்னர் பிருத்விராஜின் வீர சரித்திரத்தை புனைவு கலந்து இயக்குநர் சந்திரபிரகாஷ் திவேதி 175 கோடி பட்ஜெட் செலவில் இயக்கி இருந்தார்.

9. கங்குபாய் கத்தியவாடி
இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான கங்குபாய் கத்தியவாடி திரைப்படத்திற்கும் IMDBல் 7.0 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாப் 10 பட்டியலில் சாம்ராட் பிருத்விராஜ் படத்துடன் ஒப்பிட்டால், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றியடைந்த இந்த படம் 9வது இடத்தை பிடித்துள்ளது.

8. ரன்வே
அமிதாப் பச்சன், அஜய் தேவ்கன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியான ரன்வே திரைப்படம் IMDBல் 7.2 ரேட்டிங் உடன் இந்த தரவரிசையில் 8வது இடத்தை பிடித்துள்ளது. பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றிப் பெற்றாலும், பாலிவுட் ரசிகர்கள் இந்த படத்தை தியேட்டரில் கொண்டாட வில்லை. இந்த படத்தின் புரமோஷன் சமயத்தில் தான் இந்தி திணிப்பு பிரச்சனையை கையில் எடுத்து இருந்தார் அஜய் தேவ்கன். அவருக்கும், கன்னட நடிகர் கிச்சா சுதிப்புக்கும் ட்விட்டர் மோதல் எழுந்தது.

7. ஜுந்த்
நாகராஜ் மஞ்சுலேவின் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான ஜுந்த் படத்தில் அமிதாப் பச்சன் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு IMDBல் 7.4 ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது. ஜி5 ஓடிடி தளத்தில் இந்த படம் தற்போது காண கிடைக்கிறது. இந்த ஆண்டு வெளியான ஸ்போர்ட்ஸ் படங்களிலேயே ஜுந்த் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

6. எ தர்ஸ்டே
ரோனி ஸ்க்ரூவாலா தயாரிப்பில் பெஸாத் கம்பட்டா இயக்கத்தில் நடிகை யமி கெளதம் லீடு ரோலில் நடித்த த்ரில்லர் படமான எ தர்ஸ்டே திரைப்படம் IMDBல் 7.8 ரேட்டிங் பெற்று அசத்தி உள்ளது. ஒரு ஒட்டுமொத்த கிண்டர் கார்டன் மாணவர்களை பிணையக் கைதிகளாக மாற்றி அதன் ஆசிரியர் இந்த சிஸ்டத்துக்கு எதிராக தனது டிமாண்டுகளை கேட்டு பெறும் கதை தான் இந்த படம்.

5. ஆர்ஆர்ஆர்
இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே வெளிநாட்டு ரசிகர்கள் மற்றும் பிரபலங்களால் அதிகம் கொண்டாடப்பட்ட படமான ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்துக்கு IMDBல் 8.0 ரேட்டிங் கிடைத்துள்ளது. இந்திய சினிமாவை உலகமே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் இயக்குநர் ராஜமெளலி. ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரின் நடிப்பு, பிரம்மாண்ட விஷுவல் எல்லாம் உலகளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

4. ஹிரிதயம்
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான காதல் படமான ஹிரிதயம் திரைப்படம் இந்திய இளைஞர்களின் இதயத்தை கவர்ந்த நிலையில், IMDBல் 8.1 ரேட்டிங் பெற்று இந்த பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளது.

3. காஷ்மீர் ஃபைல்ஸ்
இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அனுபம் கெர் நடிப்பில் வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் IMDBல் 8.3 ரேட்டிங் பெற்று டாப் 3 இடத்தை பிடித்துள்ளது. குறைவான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் 300 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது. காஷ்மீரில் இந்து பண்டிதர்கள் படு கொலை செய்யப்பட்ட கதையை இயக்கி இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.

2. கேஜிஎஃப் 2
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ், ஸ்ரீனிதி ஷெட்ட், சஞ்சய் தத், ரவீணா டாண்டன் நடிப்பில் படு மிரட்டலாக வெளியாகி இந்த ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் நம்பர் 1 படமாக மாறிய கேஜிஎஃப் 2 திரைப்படம் IMDBல் 8.5 ரேட்டிங் பெற்று இந்த பட்டியலில் டாப் 2 இடத்தை பிடித்திருக்கிறது. ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் மற்றும் கேஜிஎஃப் ஆகிய இரு படங்கள் தான் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இந்த ஆண்டு டாப் 2 இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நம்பர் ஒன் விக்ரம்
IMDBல் 8.6 ரேட்டிங் பெற்று இதுவரை வெளியான இந்திய திரைப்படங்களிலேயே நம்பர் ஒன் இடத்தை கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் பெற்றுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜின் யூனிவர்ஸ் செய்த மேஜிக் தான் இந்த இமாலய சாதனைக்கு காரணம். விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், நரேன் மற்றும் சூர்யா உள்ளிட்டவர்களின் பங்களிப்பு விக்ரம் படம் 425 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்ட உதவியது. பாலிவுட் பெல்ட்டில் ஓடிடியில் தற்போது விக்ரம் படம் நல்ல ரீச் ஆகி வருகிறது.


Click it and Unblock the Notifications











