Gun-னையே கிட்டாரே வச்சிருக்காரே கமல்.. லோகேஷ் கனராஜ் வெளியிட்ட தரமான விக்ரம் அப்டேட்!

சென்னை: உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாள் வரும் நவம்பர் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது.

கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தற்போது நடித்து வரும் விக்ரம் படத்தின் அப்டேட் குறித்த தரமான அப்டேட்டை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

நாளை மாலை கமல் ரசிகர்களுக்கு செம 'விக்ரம்' விருந்து காத்துக் கொண்டிருக்கிறது கன்ஃபார்ம்.

கமல் பிறந்தநாள்

கமல் பிறந்தநாள்

உலக நாயகன் கமல்ஹாசனின் 67வது பிறந்தநாள் வரும் நவம்பர் 7ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கமல் ரசிகர்கள் பலரும் இந்த ஆண்டும் கமல் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாட காத்திருக்கின்றனர். ஞாயிற்றுக் கிழமை என்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பிக் பாஸ் போட்டியாளர்கள் கமலுக்கு வாழ்த்து சொல்ல காத்திருக்கின்றனர்.

மின்னல் வேகத்தில் விக்ரம்

மின்னல் வேகத்தில் விக்ரம்

மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது மின்ன வேகத்தில் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கமலுடன் இணைந்து விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், ஆண்ட்ரியா, ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

விக்ரம் கிளான்ஸ்

விக்ரம் கிளான்ஸ்

கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் ஒரு சூப்பரான விக்ரம் பட அப்டேட்டையும் கொடுத்துள்ளார். நாளை மாலை 6 மணிக்கு கமல் நடிப்பில் காட்டுத்தனமாக உருவாகி வரும் விக்ரம் படத்தின் கிளான்ஸ் வெளியாக உள்ளது.

பீஸ்ட் உடன் போட்டி

பீஸ்ட் உடன் போட்டி

விக்ரம் திரைப்படம் வரும் 2022 ஏப்ரல் மாதம் வெளியாகும் என்கிற அறிவிப்பையும் இயக்குநர் லோகேஷ் கனகரான் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வன், பீஸ்ட், கேஜிஎஃப் 2 உள்ளிட்ட பல படங்களுடன் கமலின் விக்ரம் போட்டியிட போவது உறுதியாகி உள்ளது.

கிளான்ஸ் என்றால் என்ன

கிளான்ஸ் என்றால் என்ன

புதிய படங்களை புரமோட் செய்ய டிரைலர்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், டிரைலரை சுருக்கி டீசர் வெளியிட்டார்கள். சிலர் படத்தின் முதல் 5 நிமிட காட்சிகளையே புரமோஷனுக்கு வெளியிட்டனர். தல அஜித்தின் வலிமை படம் மூலமாக தமிழ் சினிமாவில் கிளிம்ப்ஸை அறிமுகப்படுத்தினர். இந்நிலையில் கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் Glance நாளை வெளியாகிறது. கிளிம்ப்ஸை விட சின்ன வெர்ஷன் வீடியோவாக கிளான்ஸ் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கிட்டார் மாதிரி

கிட்டார் மாதிரி

பெரிய பிளாஸ்ட் பேக்ரவுண்டில் Gun-னையே கிட்டார் மாறி கமல் வைத்து இசையமைத்து ரசிக்கும் படியான அசத்தலான போஸ்டரும் தற்போது வெளியாகி உள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் 'வாவ்' என வாய் பிளந்து கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

கமல் நன்றி

கமல் நன்றி

விக்ரம் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 'Advance Happy Birthday Ulaganayagan Kamal Haasan sir' என ட்வீட் போட்டு விக்ரம் படத்தின் கிளான்ஸ் நாளை மாலை ரிலீசாகும் அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளார். அந்த ட்வீட்டை பார்த்த கமல் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விக்ரம் படக்குழுவினருக்கு நன்றி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X