ஹிந்தி டப்பிங் ரைட்ஸில் முந்திய விக்ரம்… எத்தனை கோடி தெரியுமா ?

சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் இந்தி டப்பிங் உரிமை 37 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது.

கோல்டுமைன் என்ற நிறுவனம் இந்த தொகையை கொடுத்து இந்தி டப்பிங் உரிமையை பெற்றுள்ளதாக கூறுப்பட்டுவந்த தகவல் தற்போது உறுதியாகி உள்ளது.

இந்த படத்தை கமல்ஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3 முன்னணி நடிகர்கள்

3 முன்னணி நடிகர்கள்

மாநகரம், கைதி, மாஸ்டர் என வெற்றிப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், 3 முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி வரும் திரைப்படம் விக்ரம். இந்த படத்தின் ஷூட்டிங்கின் சென்னையில் மிகவும் எளிமையான முறையில் தொடங்கியது. இதில் இயக்குனர் லோகேஷ், நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். மாஸ்டர் படத்தின் மகத்தான வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் யாரை வைத்து இயக்குவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்க உள்ளதாக அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

விறுவிறுப்பான படப்பிடிப்பு

விறுவிறுப்பான படப்பிடிப்பு

கமல் தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் மிகவும் பிஸியாக இருந்தால், தேர்தலுக்கு பிறகு இப்படத்தில் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து, கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமானதால், படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது படப்பிடிப்பு படுஜோராக நடந்து வரும் நிலையில், அடுத்து இந்த படத்தில் நடிக்க உள்ளது யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மிகவும் மகிழ்வித்தது. இதில், விஜய் சேதுபதி, கமல், ஃபகத் பாசில் ஆகிய மூவரின் முகமும் இடம் பெற்றிருந்தது. உலக நாயகன் உடன் நடிப்பில் பட்டையைக் கிளப்பும் நடிகர்களான ஃபகத் பாசில், விஜய் சேதுபதி இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது. அரசியலில் தீவிரம் காட்டி வந்த கமல் நீண்ட இடைவெளைக்குப் பிறகு ஷூட்டிங்கில் பங்கேற்றதால் ஒரு மாணவன் போல் உணர்கிறேன் என உருக்கமாக தெரிவித்திருந்தார்.

ஆண்ட்ரியா ஹீரோயினா?

ஆண்ட்ரியா ஹீரோயினா?

இந்நிலையில், இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிகப்பு நிற கோர்ட் அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, கோடு ரெட் (code RED) என குறிப்பிட்டுள்ளார். விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் இதே போல் தான் குறிப்பிடப்பட்டிருக்கும் என்பதால், விக்ரம் படத்தில் நடிகை ஆண்ட்ரியா இணைந்துள்ளதை சிம்பாளிக்கா கூறுகிறார் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கனவே பல படங்களில்

ஏற்கனவே பல படங்களில்

நடிகை ஆண்ட்ரியா ஏற்கனவே கமலுடன் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைக்க உள்ளார்.

காளிதாஸ் ஜெயராம்

காளிதாஸ் ஜெயராம்

அதேபோல இந்த படத்தில் கமலுக்கு மகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க காளிதாஸ் ஜெயராம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கமல் மீது பெரிய மரியாதைக் கொண்டவர் நடிகர் ஜெயராம் அவரின் மகன் தான் காளிதாஸ் ஜெயராம். ஒரு பக்க கதை படத்தின் அறிமுக விழாவில், காளிதாஸ் ஜெயராமின் கையைப் பிடித்து மேடைக்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தி வைத்தவர் கமல் என்பது நினைவு கூரத்தக்கது.

இந்தி டப்பிங் உரிமை

இந்தி டப்பிங் உரிமை

இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, சர்கார் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த கிரிஷ் கங்காதரன் இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். விக்ரம் படத்தின் இந்தி டப்பிங் உரிமம் மட்டும் ரூ.35கோடி முதல் ரூ.40கோடி வரையில் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அந்த தகவல்கள் தற்போது உறுதியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய்சேதுபதி,ஃபகத் பாசில் என பிரம்மாண்ட கூட்டணியுடன் படம் உருவாகியுள்ளதால் இந்தி ரைட்ஸ் உரிமையின் விலை எகிறியதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X