“விக்ரம்“ படத்தில் நடித்த நடிகர்களின் சம்பள விவரம்.. விஜய் சேதுபதிக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : விக்ரம் படம் ஓரிருநாளில் வெளியாக உள்ள நிலையில், படத்தில் நடித்த நடிகர்களுக்கு அளிக்கப்பட்ட சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது

மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது விக்ரம் படத்தை இயக்கி உள்ளார்.

இப்படத்தில், பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 3ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

விக்ரம்

விக்ரம்

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் விக்ரம். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கிரீஷ் கங்காதரன் மேற்கொண்டுள்ளார். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படதிலிருந்து கமல்ஹாசன் எழுதி பாடிய பத்தல பத்தல பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த பாடலில் இடம் பெற்ற வரிகள் சர்ச்சையை கிளப்பினாலும் பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.

மிரட்டலான டிரைலர்

மிரட்டலான டிரைலர்

விக்ரம் படத்தின் டிரைலர் வெளியானது அதில், கமல்ஹாசனின் கர்ஜனைக்குரலில், காடுனு ஒன்னு இருந்தா... சிங்கம், புலி, சிறுத்தை வேட்டைக்குப் போகும் என்று கமல் பேசும் வசனம் விக்ரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு கமல்ஹாசனை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

ஒரிஜினல் துப்பாக்கி

ஒரிஜினல் துப்பாக்கி

விக்ரம் திரைப்படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ளதால் படம் குறித்த சுவாரசியத் தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகின்றன. இந்த படத்துல 70 விதமான 1000 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும், கமல் துப்பாக்கியுடன் வரும் ஒரு சீனில், பெரிய துப்பாக்கி ஒரிஜினலா அவருக்காக செய்ததாகவும் கூறப்படுகிறது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்திற்கு தணிக்கைக்குழு யூஏ சான்றிதழ் அளித்துள்ளது.

சம்பள விவரம்

சம்பள விவரம்

விக்ரம் படம் குறித்து பல சுவாரசியத் தகவல் வெளியாகி வரும் இந்த நேரத்தில் , படத்தில் நடித்த நடிகர்களுக்கு அளிக்கப்பட்ட சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் படம் உருவானதால் கமலுக்கு 50 கோடி ரூபாயும், விஜய் சேதுபதிக்கு 10 கோடி ரூபாயும், பஹத் பாசிலுக்கு 4 கோடி ரூபாயும் சம்பளமாக கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குநரின் சம்பளம்

இயக்குநரின் சம்பளம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு சம்பளமாக 8 கோடி ரூபாயும், இசையமைப்பாளர் அனிரூத்துக்கு 4 கோடி ரூபாயும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. படத்தில் நடித்திருந்த மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தலா 4 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முக்கியமான படம்

முக்கியமான படம்

தமிழில் தயாராகி உள்ள இப்படத்தை இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இப்படம் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்யும் என்றும், கமல்ஹாசன் திரைப்பயணத்தில் விக்ரம் திரைப்படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X