ஆரம்பிக்கலாங்களா.. விக்ரம் படத்தின் புக்கிங் துவக்கம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்!
சென்னை : நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் விக்ரம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இன்னும் 5 தினங்களில் திரையரங்குகளில் தெறிக்க காத்திருக்கிறது.
ரசிகர்களும் இந்தப் படத்திற்காக மரண மாஸாக காத்திருக்கின்றனர்.

விக்ரம் படம்
நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், சூர்யா, விஜய் சேதுபதி, நரேன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதையடுத்து சிறப்பான பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இசை வெளியீடு
முன்னதாக படத்தின் டீசர், போஸ்டர்கள் வெளியான நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீடு பிரம்மாண்டமான அளவில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சிம்பு, பா ரஞ்சித் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

5 மொழிகளில் ரிலீஸ்
படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளது. இந்நிலையில் டெல்லி, கேரளா மற்றும் மும்பை ஆகிய இடங்களில் கமல் உள்ளிட்டவர்கள் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து பல்வேறு பேட்டிகளையும் அளித்து வருகின்றனர்.

5 நாட்களில் ரிலீஸ்
படம் வெளியாக இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் படத்தின் புக்கிங்குகள் தற்போது துவங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு பிறகு ரிலீசாகும் கமலின் இந்தப் படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் மற்றும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

புக்கிங்குகள் துவக்கம்
இந்நிலையில் இந்தப் படத்தின் புக்கிங்குகள் எதிர்பார்த்ததை காட்டிலும் அதிகளவில் புக்காகும் என்று கூறப்படுகிறது. கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை இயக்கியுள்ளார். படத்தில் சூர்யா முக்கியமான கேமியோ ரோலில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் என நட்சத்திர பட்டாளமே படத்தில் காணப்படுகிறது.

திரைத் தீப்பிடிக்குமா?
இத்தகைய காரணங்கள் இந்தப் படத்தை பார்க்க ரசிகர்களுக்கு கூடுதலாக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. மொத்தத்தில் வரும் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் விக்ரம் படம் ரிலீசாகவுள்ள நிலையில், திரை தீப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இதன் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











