ஒருவாரத்தில் இவ்வளவு வசூலா? தொடர்ந்து ரெக்கார்ட் பிரேக்கிங்கில் விக்ரம் படம்!
சென்னை : நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்களின் மிரட்டலான நடிப்பில் கடந்த 3ம் தேதி ரிலீசானது விக்ரம் படம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தொடர்ந்து சர்வதேச அளவில் வசூல்வேட்டை நடத்தி வருகிறது.
4 ஆண்டுகளுக்கு பின்பு வெளியாகியுள்ள கமல்ஹாசனின் இந்தப் படம் அவருக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் சிறப்பாக கைக்கொடுத்துள்ளது.

விக்ரம் படம்
நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன், மைனா நந்தினி, மகேஷ்வரி, காயத்ரி, ஷிவானி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளத்தை சிறப்பாக பயன்டுத்தி விக்ரம் என்ற த்ரில் படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது இந்த முயற்சி சிறப்பான வகையில் ரசிகர்களை சென்றடைந்துள்ளது.

ரசிகர்கள் கொண்டாட்டம்
கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் ரிலீசான நிலையில், ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர். ரிப்பீட்டட் ஆடியன்சை திரையரங்குகளில் பார்க்க முடிகிறது. வாரயிறுதி நாட்களை போலவே வார நாட்களிலும் அரங்கு கொள்ளா காட்சிகளாக படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

சிறப்பான வசூல் சாதனை
இன்றும் நாளையும் மேலும் அதிக கலெக்ஷன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 5 மொழிகளில் வெளியான இந்தப் படம் கேரளாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக வசூல் செய்த முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதேபோல அமெரிக்காவிலும் கடந்த ஒரு வாரத்தில் 2.2 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.

வெளிநாடுகளிலும் வசூல்வேட்டை
அமெரிக்காவில் தற்போது ஜூராசிக் வேர்ல்ட் டொமினியனுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் விக்ரம் படம் காணப்படுகிறது. இதேபோல மலேசியாவிலும் கடந்த ஒரு வாரத்தில் 14 கோடி ரூபாய்க்கு மேல் படத்தின் கலெக்ஷன் காணப்படுகிறது. இந்த ஆண்டின் அதிகமாக வசூலித்த கேஜிஎப் சாப்டர் 2 படத்தின் வசூலை விக்ரம் விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

8 நாட்களில் ரூ.260 கோடி வசூல்
இதனிடையே சர்வதேச அளவில் விக்ரம் படம் கடந்த 8 நாட்களில் 260 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. இந்திய அளவில் 175 கோடி ரூபாய் மற்றும் தமிழகத்தில் 100 கோடி ரூபாய் வசூலை விக்ரம் படம் தாண்டியுள்ளது. சென்னையில் கடந்த 8 நாட்களில் 9.9 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அட்வான்ஸ் புக்கிங்
தொடர்ந்து வார இறுதி நாட்களான இன்றும் நாளையும் அட்வான்ஸ் புக்கிங்கும் தமிழகத்தில் சிறப்பாக உள்ளதால் விரைவில் அடுத்த மைல்கல்லை படத்தின் வசூல் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வலிமை படத்தின் வசூலை தாண்டிய நிலையில், அடுத்ததாக பீஸ்ட் மற்றும் பாகுபலி 2 படங்களை நோக்கி தற்போது விக்ரம் நடைபோடுகிறது.

கமலின் எனர்ஜி
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் இந்தப் படத்தின்மூலம் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் ரசிகர்களை எதிர்கொண்டுள்ளார். அந்த வகையில் இரண்டிலுமே தன்னுடைய முத்திரையை அவர் பதிவு செய்துள்ளார். அவரது எனர்ஜி படத்தில் சிறப்பாக காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











