பாக்ஸ் ஆபீசில் சாதனை.. விக்ரம் 100 நாள் கொண்டாட்டம்..வாழ்த்து சொன்ன ரெட் ஜெயண்ட்!

சென்னை : நடிகர்கள் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெளியானது விக்ரம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் எடுத்த எடுப்பிலேயே ஏராளமான ரசிகர்களையும் வசூலையும் பெற்றது.

படத்தின் வசூல் 400 கோடி ரூபாய்களை கடந்துள்ள நிலையில், தற்போது திரையரங்குகளில் 100 நாட்களையும் கடந்து சாதனை புரிந்துள்ளது.

விக்ரம் படம்

விக்ரம் படம்

கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், சூர்யா உள்ளிட்டவர்களின் மிரட்டலான நடிப்பில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசானது விக்ரம் படம். இந்தப் படத்தில் மேக்கிங் மற்றும் திரைக்கதை ரசிகர்களை கட்டிப் போட்டது. படம் ரிலீசானதில் இருந்தே கமல் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

பான் இந்தியா படம்

பான் இந்தியா படம்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் இந்தப் படம் வெளியான நிலையில், தமிழில் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் படம் பட்டையை கிளப்பியது. குறிப்பாக மலையாளத்தில் அதிகமான கலெக்ஷனை எட்டியது. படத்தில் பகத் பாசிலின் காட்சிகள் அதிகமான இருந்தது இதற்கான காரணமாக அமைந்தது.

 அடுத்தடுத்த ஓடிடி ரிலீஸ்

அடுத்தடுத்த ஓடிடி ரிலீஸ்

இந்தப் படம் தொடர்ந்து கடந்த மாதத்தில் நெட்பிளிக்சில் வெளியானது. இதுமட்டுமில்லாமல் படம் ஷேர் செய்யப்பட்டு தற்போது ஜீ5 ஓடிடி தளத்திலும் வெளியாகவுள்ளது. தற்போது படத்தை திரையரங்குகளில் மட்டுமில்லாமல் ஓடிடியிலும் அதுவும் இரண்டு தளங்களில் ரசிகர்கள் பார்க்க முடியும்.

ரசிகர்கள் காத்திருப்புக்கு பலன்

ரசிகர்கள் காத்திருப்புக்கு பலன்

இந்தப் படத்தில் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கமல் நடித்திருந்தார். அவரது படங்களுக்காக அவரது ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருந்த நிலையில், இதுபோன்ற பிளாக்பஸ்டர் படத்தை அவர்களுக்கு பரிசாக கொடுத்துள்ளார் கமல். தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அவர் இணைந்துள்ளார்.

100 நாட்களை கடந்த விக்ரம்

100 நாட்களை கடந்த விக்ரம்

இதனிடையே விக்ரம் படம் திரையரங்குகளில் தன்னுடைய 100வது நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதையொட்டி பல்வேறு தரப்பினரும் கமல் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் படத்தை தமிழகத்தில் வெளியிட்ட ரெட் ஜெயண்ட் மூவிசும் தற்போது தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது.

 ரெட் ஜெயண்ட் பாராட்டு

ரெட் ஜெயண்ட் பாராட்டு

கடந்த 100 நாட்களாக ரசிகர்களின் இதயத்தை வென்று, பாக்ஸ் ஆபீசிலும் சிறப்பான புதிய சாதனையை இந்தப் படம் செய்துள்ளதாக கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளது. மேலும் படக்குழுவினர் அனைவரும் இருக்கும் வகையில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் லோகேஷ், அனிருத், விஜய் சேதுபதி, கமல்ஹாசன், பகத் பாசில், சூர்யா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X