Don't Miss!
- News
37 வயதில் உச்சபட்ச அதிகாரம்.. நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா திடீர் ராஜினாமா.. இப்படி ஒரு காரணமா?
- Lifestyle
இந்த ராசிக்காரங்க பிடிச்சவங்கள பாதுகாக்க என்ன வேணாலும் செய்வாங்களாம்... இவங்க உங்ககூட இருக்குறது அதிர்ஷ்டம்!
- Sports
ஒரே கல்லில் 3 மாங்காய்.. சச்சினின் சாதனையை உடைத்தெறிந்த சுப்மன் கில்.. ரசிகர்கள் ஆச்சரியம்!
- Automobiles
புதுசா கார் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! நல்ல மைலேஜ் தரும் 3 சிஎன்ஜி கார்கள் அறிமுகமாக இருக்கு!
- Technology
இப்படி ஒரு 5G போனுக்காக வெயிட் பண்ணலாம் தப்பில்லை: ஒன்பிளஸ் சொன்ன நற்செய்தி.!
- Finance
கிடைப்பதை எல்லாம் விற்கும் எலான் மஸ்க்.. பீதியில் டிவிட்டர் ஊழியர்கள் ..?! உண்மை என்ன..?
- Travel
நியூயார்க் டைம்ஸின் 2023 ஆம் ஆண்டு பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்திய மாநிலம்!
- Education
பெட்ரோலிய கழகத்தில் ரூ.81 ஆயிரத்தில் பணி வாய்ப்பு...!
கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த வசூல் இத்தனை கோடியா? தமிழ்நாட்டில் லோகேஷ் செய்த சம்பவம்!
சென்னை: கமல்ஹாசனின் வாய்ஸ் ஓவரில் ஆர்ம்பித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் 400 கோடியை கடந்து 500 கோடியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
அதற்கு முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் 100 நாட்கள் தியேட்டரில் ஓடிய நிலையில், ஒட்டுமொத்தமாக எத்தனை கோடி வசூல் செய்தது என்பது குறித்த ஹாட் அப்டேட் கிடைத்துள்ளது.
அதிலும், தமிழ்நாட்டில் மட்டும் விக்ரம் திரைப்படம் வேறலெவல் சம்பவம் செய்துள்ளதாக கூறுகின்றனர்.
கமல்ஹாசனின் '’இந்தியன் 2’’ ரிலீஸ் எப்போது.. முக்கிய அப்டேட்!

கமலுக்கு கிடைத்த சக்சஸ்
கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு கைதி படத்துடன் பக்காவாக ஒரு கனெக்ஷன் ஏற்படுத்தி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது குருநாதரான கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய வெற்றியை விக்ரம் படத்தின் மூலம் தேடித் தந்தார். இந்த ஆண்டு தலை குனிந்திருந்த தமிழ் சினிமாவை முதல் நபராக தூக்கி நிறுத்தி அசத்தினார் கமல்.

450 கோடி வசூல்
விக்ரம் திரைப்படம் 400 கோடி வசூல தொட்டு இருந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அந்த படம் 100 நாட்கள் திரையில் ஓடிய நிலையில், ஒட்டுமொத்தமாக 450 கோடி லைஃப் டைம் வசூலை எட்டியுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் அப்டேட் கொடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் தரமான சம்பவம்
விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை படங்கள் இந்த ஆண்டு உலகம் முழுவதும் வசூலித்த தொகையை தமிழ்நாட்டில் மட்டுமே நெருங்கி மாஸ் காட்டியுள்ளது கமலின் விக்ரம் என்கிற அட்டகாச தகவலும் வெளியாகி உள்ளது. அதிகபட்சமாக தமிழ்நாட்டில் மட்டும் விக்ரம் படம் 190 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக கூறுகின்றனர்.

தளபதி 67 அப்டேட்டுக்காக
விக்ரம் படத்தை போலவே தளபதி 67 திரைப்படமும் லோகேஷ் யூனிவர்ஸாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வரும் தீபாவளிக்கு அந்த அப்டேட்டை மட்டும் சொன்னால் சோஷியல் மீடியாவிலேயே சரவெடி வெடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். விஜய்க்கு நிச்சயம் அந்த படம் ஒரு இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்கும் என்றும் ரசிகர்கள் உறுதியாக நம்பி வருகின்றனர்.

1000 கோடி
விக்ரம் படத்தைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்துக்கு குரல் கொடுத்து அந்த படத்தையும் 400 கோடி வசூல் படமாக மாற்றி விட்டார் கமல். இந்நிலையில், அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படம் 1000 கோடி வசூலை எட்டுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. பிக் பாஸ், இந்தியன் 2 என படுபிசியாக இந்த வயதிலும் செம ஆக்டிவாக உள்ளார் உலகநாயகன்.