மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விக்ரம் படத்துக்கும் ஆடியோ லாஞ்ச்.. எங்கே எப்போ நடக்கப் போகுது தெரியுமா?
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடிப்பில் உருவாகி உள்ள விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மாநகரம், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள படம் விக்ரம்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனமே இந்த படத்தை தயாரித்துள்ளது.

மாஸ்டர் ஆடியோ லாஞ்ச்
மாநகரம், கைதி படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதிக பொருட்செலவில் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய படம் மாஸ்டர். கொரோனா பரவலுக்கு முன்பாக அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. அதன் பின்னர் விஜய்யின் பீஸ்ட் படத்துக்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. இந்நிலையில், கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு இயக்குநர் லோகேஷ் கனகாராஜ் ரெடியாகி விட்டார்.

கமலின் விக்ரம்
கமல் தயாரித்து நடிக்கும் படம் விக்ரம். தனது பரம ரசிகர் இயக்கத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் புகழ்ந்து ட்வீட் ஒன்றையும் கமல் போட்டிருந்தார். கமல், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், நரேன் உள்ளிட்டோரை வைத்து விக்ரம் படத்தை வித்தியாசமாக உருவாக்கி உள்ளார் லோகேஷ் கனகராஜ்.

நேரு ஸ்டேடியத்தில்
கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நடிகர் ஜாக்கி சான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில், அதே நேரு ஸ்டேடியத்தில் வரும் மே 15ம் தேதி மாலை 6 மணிக்கு விக்ரம் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற போகும் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

ஃபர்ஸ்ட் சிங்கிள்
மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விக்ரம் படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்துள்ளார். அனிருத் இசையில், கமல் பாடியுள்ள "பத்தல பத்தல" எனும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் மே 11ம் தேதியே வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்த காத்திருக்கிறது. மற்ற பாடல்கள் மற்றும் படத்தின் மிரட்டலான டிரைலர் வரும் மே 15ம் தேதி வெளியாகிறது. ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் விக்ரம் படம் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











