பஞ்ச தந்திர பட ஸ்டைலில் விக்ரம் ப்ரமோஷன்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ !
சென்னை : விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி இருந்த லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பாஹத் பாசில் ஆகியோரை வைத்து விக்ரம் என்னும் படத்தை இயக்கி முடித்துள்ளார்.
Recommended Video
இத்திரைப்படம் ஜூன் 3 ந்தேதி வெளியாக உள்ள நிலையில் இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் படுவேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், விக்ரம் படத்தின் ப்ரமோஷன் தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்று, இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பஞ்ச தந்திரம்
2002ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியானத் திரைப்படம் பஞ்ச தந்திரம். இத்திரைப்படத்தில், கமல்ஹாசன், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீமன் மற்றும் யூகி சேது ஆகியோர் நண்பர்களாக நடித்திருப்பார்கள் . கமலுக்கு ஜோடியாக சிம்ரன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடித்திருப்பார். இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை நிறைந்ததாக இருக்கும். கமலின் எவர் கிரீன் படங்களில் பஞ்ச தந்திர படமும் ஒன்று.

செம காமெடி
இந்தபடத்தின் ஹைலைட்டே ஐந்த நண்பர்களும் ஒரு ட்ரிப்புக்கு பிளான் போட ஒன்றாக இணைந்து தொலைபேசியில் பேசுவார்கள். அந்த நேரத்தில் இந்த சீன் மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது. ஐந்து பேரும் ஒன்றாக இணைந்து, ஒரு ட்ரிப்புக்கு பிளான் போட கடைசியில் அந்த பிளான் சொதப்ப படம் முழுக்க நகைச்சுவைக்கு சிறிதும் பஞ்சமே இருக்காது.

பஞ்ச தந்திர கூட்டணி
இந்த படத்தில் ஜெயராம், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீமன் மற்றும் யூகி சேது ஆகியோர் இணைந்து பேசும் காட்சியை வைத்து விக்ரம் படத்திற்கு புது ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. இதில், யூகி சேது பேப்பரை பார்த்து அதிர்ச்சி அடைந்து மற்ற நண்பர்களுடன் தொலைபேசியில் பேசுகிறார். இந்த ப்ரோமோவின் இறுதில் Hello என்று கம்பீரமான குரலில் கமல் பேசுகிறார். விக்ரம் படத்திற்காக பஞ்சதந்திர கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

மிகத்தீவிரமாக
படம் வெளியாக இன்னும் சில தினங்களே இருப்பதால், விக்ரம் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளும் படு ஜோராக ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. பேன் இந்தியா திரைப்படம் என்பதால், பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை, பல நிகழ்ச்சிகளில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











