அடேங்கப்பா.. என்ன வேகமாக இருக்காங்க.. “விக்ரம்“ஆன்லைனில் லீக் !

சென்னை : இன்று காலை வெளியான விக்ரம் திரைப்படம், மின்னல் வேகத்தில் ஆன்லைனில் லீக்காகி உள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியுள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் மூலம் நடிகர் கமல்ஹாசனை முதல் முறையாக இயக்கியுள்ளார்.

இப்படத்தில் கமலோடு விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாஸில், நரேன், ஜெயராம் காளிதாஸ், மைனா நந்தினி, கௌரவ தோற்றத்தில் நடிகர் சூரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

விக்ரம்

விக்ரம்

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயின்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளான இன்று விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

மாஸ் திரைப்படம்

மாஸ் திரைப்படம்

2018-ம் ஆண்டு விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் கழித்து கமல் நடிப்பில் விக்ரம் படம் வெளியானதால், நள்ளிரவு முதலே திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கூட்டம் அலைமோதினர். படம் செம்ம மாஸாக இருப்பதாகவும், கமல், விஜய்சேதுபதி, பகத் பாசில் என ஒவ்வொருவடைய நடிப்பும் அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.

திருவிழாப்போல

திருவிழாப்போல

இந்த படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி விக்ரம் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு முன்பே விக்ரம் படத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கியது. ரசிகர்கள் மகிழ்ச்சி ஆராவாரத்தில் புக்கிங் செய்து வந்த நிலையில், இன்று விக்ரம் திரைப்படம் கோலாகலமாக வெளியானது.

Recommended Video

Vikram Public Review | Kamal Haasan | VijaySethupathi | Lokesh Kanagaraj | #vikramfdfs
ஆன்லைனில் லீக்

ஆன்லைனில் லீக்

ரசிகர்கள் இந்நாளை திருவிழா போன்று கொண்டாடி வருகின்றனர். படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இதையடுத்து, இன்று அதிகாலை 4.30 மணிக்கு திரையரங்கில் படம் வெளியானது. படம் வெளியாகி 3 மணிநேரத்திற்கு உள்ளேயே , மூவிரூல்ஸ், தமிழ் ராக்கர்ஸ், மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட இணையதளங்களில் விக்ரம் படம் கசிந்துள்ளது. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் அடேங்கப்பா.. என்ன வேகமாக இருக்காங்க என கூறி வருகினற்னர். இதனால் இப்படத்தின் வசூல் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X