மார்ச் மாதத்தில் வெளியாகிறதா உலகநாயகனின் விக்ரம்?
சென்னை : உலக நாயகன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி வருகிறது விக்ரம் படம்.
த்ரில்லர் படமாக உருவாகிவரும் இந்தப் படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
படத்தின் படப்பிடிப்பு ஜரூராக நடைபெற்றுவரும் நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் படம் ரிலீசாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

உலக நாயகன் கமல்
உலக நாயகன் கமல் நடிப்பில் உருவாகி வருகிறது விக்ரம் படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே காணப்படுகிறது. இந்தப் படத்தை தன்னுடைய ராஜ்கமல் இன்டர்நேஷனல் சார்பில் கமல் தயாரித்து வருகிறார்.

விக்ரம் படம்
ராஜ்கமல் இன்டர்நேஷனலுடன் இணைந்து இந்தப் படத்தை டர்மரிக் மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் அறிமுக டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றன. படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவுற்று தற்போது 3வது கட்டமாக சென்னையில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

விக்ரம் படத்தின் அப்டேட்கள்
கமல் அரசியல் பிரவேசம் காரணமாக இடையில் படங்களில் நடிக்காத நிலையில், தற்போது இந்தப் படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து இந்தியன் 2 படத்திலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில் விக்ரம் படத்தின் தொடர் அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை குஷியாக்கி வருகின்றன.

மார்ச் மாதத்தில் ரிலீஸ்
இதையடுத்து படம் எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் இந்தப் படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

அடுத்தடுத்த படங்கள்
விக்ரம் படம் மட்டுமின்றி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் கமல் ரொம்பவே பிசி. இந்நிலையில் விக்ரம் படத்தையடுத்து ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, வெற்றி மாறன் இயக்கத்தில் ஒரு படம், பிரபல மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம், பா ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படம் என கமல் அடுத்தடுத்த படங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பாபநாசம் குறித்த எதிர்பார்ப்பு
இதனிடையே கமல் நடிப்பில் வெளியான பாபநாசம் படம் சிறப்பான வெற்றியை பெற்ற நிலையில், அதன் இரண்டாவது பாகத்தில் கமல் எப்போது நடிப்பார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். மலையாளம் மற்றும் தெலுங்கில் இரண்டாவது பாகம் உருவாகியுள்ள நிலையில், தமிழிலும் இதுகுறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











