கமல்ஹாசனின் விக்ரம் ஷூட்டிங் ஓவர்.. அப்புறம் ஏன் பிக் பாஸில் இருந்து விலகினாரு.. ரசிகர்கள் கேள்வி!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
படக்குழுவினருடன் கமல் கேக் வெட்டிக் கொண்டாடும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.
விக்ரம் படப்பிடிப்புக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் கமல் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் ஷூட்டிங் ஓவர்
இந்நிலையில், விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், விக்ரம் படத்தின் ஷுட்டிங் நிறைவடைந்ததை முன்னிட்டு படக்குழுவினருடன் கமல்ஹாசன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தையும் இணையத்தில் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

கமலுடன் இணைந்து
நடிகர் கமல்ஹாசன் உடன் இணைந்து இந்த படத்தில் விஜய்சேதுபதி மற்றும் பகத் ஃபாசில் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலுடன் இணைந்து ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுக்க காத்திருக்கிறார்.

கைதி 2
மாநகரம், கைதி மற்றும் மாஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் உருவாகி வரும் நிலையில், கைதி 2 படமும் விரைவில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன், சர்தார், விருமன் என பல படங்களில் பிசியாக உள்ள நிலையில், கைதி 2 படத்துக்கு எப்போது தேதிகளை ஒதுக்குவார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளன.

பிக் பாஸ் விட்டு விலகியது ஏன்
கடந்த வாரம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதால் விக்ரம் படப்பிடிப்பை முடிக்காமல் கால தாமதம் ஆகிறது என கமல் கூறியிருந்தார். ஆனால், அதற்குள் இந்த வாரத்திற்குள் விக்ரம் படப்பிடிப்பே நிறைவடைந்துள்ள நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலக வேறு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏகப்பட்ட பணிகள்
விக்ரம் படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளிலும் ஒரு தயாரிப்பாளராக கமல் கவனம் செலுத்த வேண்டியது இருக்கிறது என்றும், சிவகார்த்திகேயனின் படத்தை தயாரிக்கும் பணிகள் என ஏகப்பட்ட வேலைகள் இருப்பதால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கமல் டாட்டா காட்டி உள்ளார் என்றும் ஏகப்பட்ட விளக்கங்களை கமல் ரசிகர்களே கூறி வருகின்றனர்.

ஏப்ரல் 28
விக்ரம் திரைப்படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வரவிருக்கும் நிலையில், அதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இளமை இதோ இதோ பாடல் ஒலிக்க கமல்ஹாசனை வைத்து கேக் வெட்ட வைத்து விக்ரம் படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











