Don't Miss!
- News
இதுதான் ரிஷி சுனக்.. விதியை மீறிய மூத்த அமைச்சர்.. ஒரே அடியாக தூக்கிய ரிஷி சுனக்! அதிரடி நடவடிக்கை
- Automobiles
இன்றைய 2023ஆம் காலக்கட்டத்தில் இந்த அம்சங்கள் இன்றி கார் வாங்குவதே வேஸ்ட்! உங்க கார்களில் என்னென்ன மிஸ் ஆகுது?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
- Technology
பட்ஜெட் விலை Poco எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க.!
- Finance
பட்ஜெட்டுக்கு முன்பு தங்கம் விலை சரிவு.. தொடர்ந்து குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?
- Lifestyle
பிப்ரவரி மாதத்தில் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பணப் பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷாரா இருங்க...
- Travel
இனி திருப்பதி தரிசனம், ரூம் புக்கிங் செய்வது ஈசி – TTD யின் புதிய மொபைல் செயலி!
- Sports
3வது டி20 போட்டியிலும் இப்படியா? அகமதாபாத் பிட்ச்-ல் உள்ள சஸ்பன்ஸ்.. என்ன செய்யப்போகிறார் பாண்ட்யா??
ஓடிடியில் ஷேர் ஆகும் கமலின் விக்ரம் படம்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் பத்தி பாக்கலாமா?
சென்னை : திரையரங்குகளில் படங்கள் வெளியாவதை எவ்வளவு ஆர்வத்துடன் ரசிகர்கள் பார்க்கிறார்களோ, அந்த அளவிற்கு ஓடிடி ரிலீஸ் படங்களுக்கும் தற்போது வரவேற்பு காணப்படுகிறது.
ஒவ்வொரு வாரமும் திரையரங்கு ரிலீஸ்களுக்கு இணையாக ஓடிடியிலும் புதிய மற்றும் திரையரங்க ரிலீசுக்கு பிந்தைய படங்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் இந்த வாரமும் சிறப்பான பல படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளன. தற்போது அந்த லிஸ்டை பார்க்கலாம்.
”சாமி சாமி” பாட்டுக்கு க்யூட்டாக டான்ஸ் ஆடிய பேபி… இப்போ ராஷ்மிகா மந்தனாவோட ஆசை இதுதான்!

ஓடிடி ரிலீஸ் படங்கள்
திரையரங்குகள் எப்படி ஒவ்வொரு ரசிகனையும் கொண்டாட வைக்கிறதோ அந்த அளவிற்கு அனைத்து தரப்பு ரசிகனின் வரப்பிரசாதமாக தோன்றியுள்ளது ஓடிடி. ஓடிடியால் திரையரங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதே திரையரங்க உரிமையாளர்களின் வாதமாக ஒரு கட்டத்தில் இருந்தது. ஆனால் அத்தகைய வாதங்களை உடைத்தெறிந்து வெற்றி நடைப் போட்டு வருகிறது ஓடிடி தளங்கள்.

ரசிகர்களின் வரப்பிரசாதம்
பிரம்மாண்டமான படங்களை திரையரங்குகளில் பார்ப்பதுதான் நல்ல அனுபவத்தை தரும் என்பதே அனைத்து தரப்பினரின் வாதமாக உள்ளது. ஆனால் அப்படி வெளியாகும் அனைத்து படங்களையும் திரையரங்குகளில் பார்ப்பது சாத்தியப்படாது. தன்னுடைய விருப்பத்திற்குரிய நாயகர்களின் படங்களை மட்டுமே திரையரங்குகளில் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தை விதைத்துள்ளன ஓடிடி தளங்கள்.

அதிகமான செலவு
ஒரு நடுத்தரக் குடும்பத்தினர் ஒரு மாதத்தில் ஒருமுறை திரையரங்கிற்கு சென்று சினிமா பார்ப்பதே அவர்களுக்கு பெரிய சவாலாக அமைந்துள்ளது. இந்தக் காலக்கட்டங்களில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ஒரு திரைப்படத்தை பார்க்க குறைந்தது 4 பேர் கொண்ட குடும்பத்தினருக்கு 2000 ரூபாய் வரை செலவு பிடிக்கிறது.

ரசிகர்களின் விருப்பம்
ஆனால் ஓடிடியில் ஒரு மாதத்திற்கோ ஒரு வருடத்திற்கோ கட்டணம் செலுத்திவிட்டால், நாம் நினைத்த படங்களை நினைத்த நேரத்தில், நினைத்த இடங்களில் பார்த்துக் கொள்ளும் வசதியை இந்த ஓடிடி தளங்கள் ஏற்படுத்தியுள்ளன. பழைய கிளாசிக் படங்கள் முதல் தற்போதை பா ரஞ்சித் படங்கள் வரை இந்த தளங்களில் நாம் பார்த்துக் கொள்ளலாம்.

வீட்டிலேயே திரையரங்கம்
மேலும் நமக்கு தேவையான ஸ்நாக்சை வீட்டிலேயே செய்தும் சாப்பிட்டுக் கொள்ளலாம். என்ன வீட்டுக்காரம்மாவின் முறைப்பை சமாளிக்க வேண்டும். அது கூடுதல் தலைவலி. இல்லையென்றால் கொஞ்சம் செலவு பார்க்காமல் வீட்டிற்கு பாப்கார்ன் உள்ளிட்டவற்றை வாங்கி வந்து வைத்துக் கொண்டு, ஹோம் தியேட்டர் இருந்தால், திரையரங்குகளின் அதே எபக்ட்டுடன் படங்களை பார்த்துக் கொள்ளலாம்.

இந்த வார ஓடிடி படங்கள்
இந்த வாரம் சிறப்பான படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் என களைக்கட்டியுள்ளன. அந்த வகையில் முன்னதாக கடந்த ஜூலை 8ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான கமலின் விக்ரம் படம் தற்போது அடுத்ததாக ஜீ5 தளத்திலும் ஷேர் செய்யப்பட்டு இந்த வாரம் வெளியாகிறது. முன்னதாக பிரம்மாண்ட படைப்பாக வெளியான ஆர்ஆர்ஆர் படமும் இதேபோல 3 தளங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஜீ5 தளத்தில் விக்ரம் படம்
விக்ரம் படத்தை தொடர்ந்து அடுத்ததாக எஸ்ஜே சூர்யாவின் கடமையை செய் படமும் நாளை மறுநாள் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. அடுத்ததாக ஜீவா தொகுத்து வழங்கும் சர்க்கார் வித் ஜீவா நிகழ்ச்சியும் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரமோக்கள் முன்னதாக வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

அடுத்தடுத்த மொழிப் படங்கள்
இதனிடையே நாளை மறுநாள் தெலுங்கில் ராமாராவ் ஆன் டூட்டி படம் சோனி லைவ் ஒடிடியில் வெளியாகவுள்ளது. மலையாளத்தில் அட்டென்ஷன் பிளீஸ் படம் நெட்பிளிக்சில் வெளியாகவுள்ளது. இதேபோல பாலிவுட்டின் ஜோகி படம் நெட்பிளிக்சிலும் தஹான் ஹாட்ஸ்டார் சீரிசிலும் காலேஷ் ரொமான்ஸ் எஸ்3 சோனி லைவிலும் வெளியாகவுள்ளன. ஹாலிவுட்டின் குட்நைட் மாம்மி படம் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.

சிறப்பான வரவுகள்
இந்த வாரமும் சிறப்பான பல படங்களை நாம் ஒடிடியில் பார்க்கும் வகையில் வெளியாகவுள்ளன. இந்தப் படங்களை சிலர் வெளியான நேரத்தில் பார்க்கும் வாய்ப்பை மிஸ் செய்திருக்கலாம். அல்லது பட்ஜெட் காரணமாக தவிர்த்திருக்கலாம். அந்த வகையில் இந்தப் படங்கள் ஓடிடியின் சிறப்பான வரவாகவே அமைந்துள்ளன.