Vikram Trailer: விடியலை யார் பார்க்கணும்னு நான் தான் முடிவு பண்ணுவேன்.. விக்ரம் டிரைலர் வெறித்தனம்!

சென்னை: மாநகரம், கைதி, மாஸ்டர் என மூன்று வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், நரேன் நடிப்பில் உருவாகி உள்ள விக்ரம் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

ராஜ்கமல் தயாரிப்பில் கமல்ஹாசனே இந்த படத்தை தயாரித்துள்ளார். ஆரம்பிக்கலாமா என கறி விருந்து போட்டு விக்ரம் படத்தின் டைட்டில் அறிவிப்பையே மிரட்டலாக வெளியிட்டு படப்பிடிப்பை ஆரம்பித்த லோகேஷ் கனகராஜ் டிரைலரில் ஃபுல் மீல்ஸ் கொடுத்துள்ளார்.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக பவானி எனும் கதாபாத்திரத்தில் அதிர வைத்த விஜய்சேதுபதி விக்ரம் படத்தின் டிரைலரிலும் தனது மாஸ் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

வெளியானது விக்ரம் டிரைலர்

வெளியானது விக்ரம் டிரைலர்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ள விக்ரம் படத்தின் மிரட்டலான டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி மே 15ம் தேதியான இன்று நடைபெற்றது.

மிரட்டும் கமல்

மிரட்டும் கமல்

விக்ரம் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் அறிவிப்புக்கே ஆரம்பிக்கலாமா என கறி விருந்து போட்டு பலரை போட்டுத் தள்ளுவது போல மிரட்டலாக ஆரம்பித்து வைத்த கமல் விக்ரம் படத்தின் டிரைலரில் அதை விட பல மடங்கு தனது இன்டென்ஸ் ஆன நடிப்பால் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

வில்லன் விஜய்சேதுபதி

வில்லன் விஜய்சேதுபதி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் பவானி எனும் வில்லன் கதாபாத்திரத்தில் சிறுவர் சீர்த்திருத்த பள்ளி மாணவர்களை கொண்டு கிரைம்களை செய்யும் கேங்ஸ்டராக நடித்திருப்பார். இந்த படத்தில் ஜெயில் கைதியாக தனது வித்தியாசமான வில்லத்தனத்தை வெளிப்படுத்தி உள்ளார் விஜய்சேதுபதி.

பகத் ஃபாசில்

மலையாள திரையுலகின் நடிப்பு ஜாம்பாவனான பகத் ஃபாசிலும் தனது போர்ஷனை பக்காவாக செய்து ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார். அனிருத் இசையில் தெறிக்கும் பின்னண் இசையில் விக்ரம் படத்தின் டிரைலர் தாறுமாறாக தற்போது வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X