twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரிலீசுக்கு முன்னாடியே இத்தனை கோடி பிசினஸா.. இந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை பிடிக்குமா விக்ரம்?

    |

    சென்னை: இன்னும் ஒரே ஒரு நாள் தான் இருக்கு கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் வெளியாக, இந்நிலையில், அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், நரேன், காயத்ரி, ஸ்வாதிஸ்டா, மைனா நந்தினி மற்றும் சூர்யா நடிப்பில் கொலமாஸ் திரைப்படமாக உருவாகி உள்ளது விக்ரம்.

    கமல் நடிப்பில் வெளியான முதல் பாகத்திற்கும் தற்போது வெளியாகப் போகும் விக்ரமுக்கும் ஏகப்பட்ட கனெக்‌ஷன்கள் உள்ளன. விக்ரம் 3ம் பாகத்தையும் சூர்யாவை வைத்து உருவாக்கவும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

     கமல் வர 4 மணி நேர தாமதம்; கொந்தளித்த மலேசிய ரசிகர்கள் - மன்னிப்பு கோரியது ஏற்பாட்டு நிறுவனம் கமல் வர 4 மணி நேர தாமதம்; கொந்தளித்த மலேசிய ரசிகர்கள் - மன்னிப்பு கோரியது ஏற்பாட்டு நிறுவனம்

    ஸ்டார் வேல்யூ

    ஸ்டார் வேல்யூ

    4 ஆண்டுகளுக்கு பிறகு கமல் நடிக்கும் படம் என்பதில் தொடங்கி இந்த படத்தில் கூடுதலாக விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் என நட்சத்திர நடிகர்கள் இணைந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்க கடைசி நேரத்தில் இணைந்த சூர்யா மேலும், படத்திற்கு ஸ்டார் வேல்யூவை ஏகபோகத்துக்கும் ஏற்றி உள்ளார். இதன் மூலம் படத்திற்கான பிசினஸும் பக்காவாக முன்னேறியது.

    ரிலீசுக்கு முன்னாடியே

    ரிலீசுக்கு முன்னாடியே

    விக்ரம் படம் ஜூன் 2ம் தேதி அமெரிக்காவிலும், ஜூன் 3ம் தேதி இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் வெளியாக உள்ள நிலையில் படத்திற்கான ப்ரீ ரிலீஸ் பிசினஸ் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு கமல் படத்திற்கு இப்படியொரு புரமோஷன் செய்வதை பார்த்தாலே படம் பல கோடியை கலெக்ட் செய்யும் என பல விநியோகஸ்தர்களும் பல ஏரியாக்களில் போட்டிப் போட்டு படத்தை வாங்கி வருகின்றனர்.

    இத்தனை கோடியா

    இத்தனை கோடியா

    ரஜினி பட ரேஞ்சுக்கு கமல் படத்தின் பிசினஸ் நடைபெறுவதை பார்த்தாலே தமிழ் சினிமாவில் பலருக்கும் மிகப்பெரிய ஆச்சர்யம் எழுந்துள்ளது. விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தின் வெற்றியும் இந்த பிசினஸுக்கு மிகப்பெரிய காரணம் எனக் கூறப்படுகிறது. படம் வெளியாகும் முன்னதாகவே 200 கோடிக்கும் அதிகமாக ப்ரீ ரிலீஸ் பிசினஸ் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

    கமலுக்கு முதல்முறை

    கமலுக்கு முதல்முறை

    எந்திரன், 2.0 உள்ளிட்ட படங்கள் மூலம் 500 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனையை நடிகர் ரஜினிகாந்த் பார்த்து விட்ட நிலையில், திட்டமிட்டபடி விக்ரம் திரைப்படம் ரிலீசுக்கு பிறகு நல்ல விமர்சனத்தை பெற்றால், நிச்சயம் கமலுக்கு முதல்முறையாக ஒரு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக விக்ரம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Recommended Video

    Surya, Vijay Sethupathi லாம் என் மாணவர்கள் இல்ல ! | Kamal Haasan | Lokesh Kangaraj | #Kollywood
    அனல் பறக்கும் புக்கிங்

    அனல் பறக்கும் புக்கிங்

    உலகம் முழுவதும் 5000 தியேட்டர்களில் விக்ரம் படத்தை வெளியிடும் முயற்சியில் கமல் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் 900 தியேட்டர்கள், வட இந்தியாவில் 1500 தியேட்டர்கள், அமெரிக்காவில் 500 தியேட்டர்கள், இது தவிர ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் மலேசியா என பல இடங்களில் பெரியளவில் படம் ரிலீசாக உள்ள நிலையில், அதற்கான புக்கிங்கும் அனல் பறந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    English summary
    Kamal Haasan’s Vikram pre release business reports are mind blowing. It will earn 200 crore plus rupees before its release stuns Kollywood.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X