கேஜிஎஃப்பை மிஞ்சும் காட்சி.. கெட்ட வார்த்தை பேசும் கமல்.. விக்ரம் டிரைலர் எப்படி இருக்கு?

சென்னை: அடேங்கப்பா.. கமல்ஹாசன் கம்பேக் டா என ரசிகர்கள் கூஸ்பம்ப்ஸ் உடன் கூச்சலிடும் அளவுக்கு விக்ரம் டிரைலர் படு மாஸாக மிரட்டுகிறது.

காடுன்னு ஒன்னு இருந்தா சிங்கம் இருக்கும், புலி இருக்கும் சிறுத்தை இருக்கும் என கமல், பகத் ஃபாசில் மற்றும் விஜய்சேதுபதியின் இன்ட்ரோவை டிரைலரில் வேற லெவல் கட்ஸ் உடன் காட்டி உள்ளனர்.

மேலும், மாஸ்டர் படத்தில் விஜய்யை கெட்ட வார்த்தை பேச வைத்த லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தில் கமல்ஹாசனையும் கெட்ட வார்த்தை பேச வைத்துள்ளார். விக்ரம் படத்தின் டிரைலர் எப்படி இருக்கு என்பது குறித்து இங்கே விரிவாக அலசுவோம்..

கேஜிஎஃப்பை மிஞ்சும் காட்சி

கேஜிஎஃப்பை மிஞ்சும் காட்சி

கைதி படத்தின் கிளைமேக்ஸில் மிஷன் கன்னை தூக்கிப் பிடித்து அத்தனை பேரையும் கார்த்தி சும்மா சுட்டு வீழ்த்துவார். அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 படத்தில் பெரியம்மா எனும் துப்பாக்கியை வைத்து போலீஸ் ஸ்டேஷனையே யஷ் சூறையாடுவார். இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள விக்ரம் படத்தின் டிரைலரின் கிளைமேக்ஸ் காட்சியிலும் அப்படியொரு வெறித்தனமான கன் ஷூட்டிங் காட்சி இடம்பெற்றுள்ளது.

சிங்கம், புலி, சிறுத்தை

சிங்கம், புலி, சிறுத்தை

விக்ரம் படத்தின் டிரைலரில் ஒரு காட்டுக்குள்ள சிங்கம் இருக்கும், புலி இருக்கும், சிறுத்தை இருக்கும் என கதை சொல்லும் கமல் வாய்ஸ் ஓவர் உடன் கமல், விஜய்சேதுபதி மற்றும் பகத் ஃபாசில் என மூவரின் இன்ட்ரோ காட்சிகளையும் தரமாக வைத்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். ஆனால், விடியலின் போது எது இருக்கும் என்பதை இயற்கை தான் முடிவு பண்ணும். ஆனால், இந்த காட்டுல நான் தான் முடிவு செய்வேன் என மாஸ் என்ட்ரி கொடுக்கிறார் கமல்.

சட்டை இல்லாமல்

சட்டை இல்லாமல்

ஒரு குழுவின் தலைவராக இந்த படத்தில் விஜய்சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிலும், ஒரு காட்சியில் போலீஸ் அதிகாரியாக வரும் பகத் ஃபாசில் உங்களுக்கும் டெரரிஸ்ட்டுக்கும் என்ன வித்தியாசம் எனக் கேட்பார். இன்னொரு காட்சியில், சட்டை அணியாமல் வெறும் உடம்புடன் விஜய்சேதுபதி நடந்து வரும் காட்சி ப்யூர் வெறித்தனம்.

விக்ரம் விக்ரம் விக்ரம்

விக்ரம் விக்ரம் விக்ரம்

டிரைலரின் ஒவ்வொரு காட்சியையும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் செதுக்கி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். நிச்சயம் கைதி, மாஸ்டர் படங்களை விட விக்ரம் படம் தரமான சம்பவமாக வரும் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளை துவம்சம் செய்ய போகிறது. அதிலும், இறுதியில் விக்ரம்.. விக்ரம். விக்ரம்ம்ம்ம்ம்ம் என கமல் கத்தும் காட்சி வேறலெவல்!

கெட்ட வார்த்தை

மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்யை கெட்ட வார்த்தை பேச வைத்திருப்பார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்தில் கமல்ஹாசனையும் அப்படியொரு கெட்ட வார்த்தையை பேச வைத்துள்ளார். டிரைலரில் அந்த இடத்துக்கு அப்படியொரு அழுத்தமான கெட்ட வார்த்தை தேவைப்பட்டதால் லோகேஷ் கனகராஜ் வைத்திருப்பதாக சொன்னாலும், அதை தவிர்த்து இருக்கலாம் என்பதே பொதுவான கருத்து.

சூர்யா இருக்காரு

சூர்யா இருக்காரு

விக்ரம் படத்தில் அமிதாப் பச்சன் கேமியோ செய்துள்ளார். சூர்யா கேமியோ செய்துள்ளார் என ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், விக்ரம் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ள நிலையில், கூட்டத்தில் ஒரு சீனில் சூர்யா இருக்கும் காட்சி காட்டப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் ஜூம் செய்து போட்டோக்களை போட்டுத் தெறிக்கவிட்டுள்ளனர். விக்ரம் படத்தின் டிரைலரை தற்போது சூர்யா ரசிகர்கள் வெறித்தனமாக டிரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X