பாகுபலி 2 வசூலை தமிழ்நாட்டில் ரஜினி, அஜித், விஜய் முறியடிப்பாங்கன்னு பார்த்தா.. கமல் கலக்கிட்டாரே!

சென்னை: இந்த ஆண்டு வெளியான ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2 படங்களின் தமிழ்நாட்டு வசூல் சாதனைகளை எல்லாம் தவிடு பொடியாக்கி உள்ளது கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம்.

ஞாயிற்றுக்கிழமையான இன்றைய வசூல் உடன் பார்த்தால் பாகுபலி 2ம் பாகம் தமிழ்நாட்டில் செய்த சாதனையையும் முறியடிக்கும் என்கின்றனர்.

பாகுபலி 2 படம் தமிழ்நாட்டில் செய்த சாதனையை ரஜினிகாந்த், அஜித் மற்றும் விஜய் படங்கள் முறியடிக்கும் என எதிர்பார்த்த நிலையில், கமல் கலக்கிட்டாரே என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வெற்றி என்பது பட்டாம்பூச்சி

வெற்றி என்பது பட்டாம்பூச்சி

அட்டகாசம் படத்திலேயே நடிகர் அஜித் வெற்றி என்பது பட்டாம்பூச்சி என பாடியிருப்பார். தமிழ் சினிமாவிலும் தற்போது அது போன்ற நிலைமை தான் இந்த ஆண்டு நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு வெளியான வலிமை படம் அதிக வசூல் என பார்த்தால், அந்த வசூலை ஆர்.ஆர்.ஆர் முறியடித்தது. அடுத்து கேஜிஎஃப் முறியடிக்க தற்போது விக்ரம் திரைப்படம் அனைத்தையும் உஃப் என ஊதித் தள்ளி விட்டது.

பாகுபலி 2 வசூல்

பாகுபலி 2 வசூல்

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி 2 திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் அதிகப்படியாக 150 கோடி வசூல் சாதனை படைத்திருந்தது. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் இதுவரை 135 கோடி வசூலை தமிழ்நாட்டில் பெற்றிருப்பதாகவும் விரைவில் பாகுபலி 2 வசூலை அசால்ட்டாக முறியடித்து விடும் எனக் கூறுகின்றனர்.

ரஜினியின் அண்ணாத்த

ரஜினியின் அண்ணாத்த

முதலில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் பாகுபலி 2 படத்தின் வசூலை முந்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அண்ணாத்த படம் விமர்சன ரீதியாக சொதப்பிய நிலையில், மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்த தவறியது. மேலும், ரஜினிகாந்த் சம்பளம் மற்றும் படத்தில் நடித்த நடிகர்களின் சம்பளமே 150 கோடி என்பதால், படத்திற்கான பட்ஜெட் அதிகமாக இல்லாதது தான் இந்த சொதப்பலுக்கு காரணம் என்றனர்.

அஜித்தின் வலிமை

அஜித்தின் வலிமை

2 ஆண்டுகளாக உலகின் பல இடங்களில் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்டை கேட்டு தொல்லை செய்தனர். ஆனால், படம் வெளியானதும் டைட்டிலில் மட்டுமே வலிமை இருப்பதை பார்த்து கடுப்பான ரசிகர்கள் தியேட்டர் பக்கமே செல்லாமல் விட்டு விட்ட நிலையில், வலிமை படமும் பாகுபலி 2 படத்தின் வசூலை முறியடிக்க முடியவில்லை.

ராஜமெளலியாலே முடியல

ராஜமெளலியாலே முடியல

பாகுபலி படத்தை விட அதிக பட்ஜெட்டில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் என இரு ஹீரோக்களுடன் ஆர்ஆர்ஆர் படத்தைக் கொடுத்த ராஜமெளலியாலே கூட பாகுபலி 2 படம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியளவில் படைத்த சாதனையை முறியடிக்க முடியாமல் போனது. ஆனாலும், இந்த ஆண்டு மிகப்பெரிய வசூல் சாதனை தமிழ்நாட்டிலும் படைத்தது ஆர்ஆர்ஆர்

ராக்கி பாய்

ராக்கி பாய்

ராஜமெளலி பார்த்து பார்த்து கட்டிய கோட்டையை ராக்கி பாய் பெரியம்மா துப்பாக்கியை வைத்து சுட்டு வீழ்த்தியது போல, அந்த படத்தை முந்தி மிகப்பெரிய வசூல் வேட்டையை இந்தியளவிலும் தமிழ்நாட்டிலும் தட்டித் தூக்கினார். ஆனால், ராக்கி பாயால் கூட பாகுபலி 2ம் பாக வசூலை தமிழ்நாட்டில் அசைத்துப் பார்க்க முடியவில்லை.

விஜய்யின் பீஸ்ட்

விஜய்யின் பீஸ்ட்

தனியாக ரிலீஸ் ஆகியிருந்தாலும், நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வசூல் ரீதியாகவாவது ஒரு நல்ல வெற்றியை பெற்றிருக்கும். எவன் வந்தாலும் மோதி பாக்கணும், கெத்தக் காட்டணும்னு பாறையிடம் முட்டினால் வேலைக்கு ஆகுமா என்கிற ரேஞ்சுக்கு கேஜிஎஃப் 2வுடன் மோதி வந்த இடமே தெரியாமல் காணாமல் போனது.

Recommended Video

Marmayogi , Marudhanayagam Release பற்றி பேசிய கமல் | Vikram Success Meet | *Kollywood
விஸ்வரூப விக்ரம்

விஸ்வரூப விக்ரம்

இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் உலகளவில் 300 கோடி வசூலையும் தமிழ்நாட்டில் 150 கோடி வசூலையும் நெருங்கி உள்ளது. இந்த ஆண்டு பாகுபலி 2 படத்தின் தமிழ்நாட்டு வசூலை ரஜினி, அஜித் மற்றும் விஜய் முறியடிக்கவில்லை என்றால் என்ன நான் முறியடிக்கிறேன் என அசால்டு செய்துள்ளார் கமல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X