அட்லீயுடன் இணையும் கமல் ஹாசன்?.. உலக நாயகனுக்கு சம்பளம் இத்தனை கோடியா?

சென்னை: கோலிவுட்டின் ஃபேமஸ் இயக்குநர்களில் ஒருவராக இருந்த அட்லீ இப்போது இந்திய அளவில் பிரபலமான இயக்குநராக இருக்கிறார். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ஜவான் திரைப்படம் வட மாநிலங்களில் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றாலும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. அடுத்ததாக அவர் சல்மான் கான் மற்றும் கமல் ஹாசனை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில் அந்தப் படத்துக்காக கமல் ஹாசன் வாங்கவிருக்கிறார் என ஒரு சம்பள தொகை கூறப்படுகிறது.

தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லீ தமிழில் முன்னணி இயக்குநர்கள் வரிசையில் இணைந்துவிட்டார். அவர் படங்களை காப்பி அடிக்கிறார் என்று ரசிகர்கள் விமர்சனத்தை முன்வைத்தாலும் அவரது மேக்கிங்கும், சீன்களும் நன்றாகவே இருக்கும் என்பது பெரும்பாலானோரின் கருத்து. இந்தச் சூழலில் முதன்முதலாக ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். அதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். ஷாருக்கானே படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார்.

kamal haasan atlee thug life

கெத்து காட்டிய அட்லீ: பொதுவாக கோலிவுட்டிலிருந்து பாலிவுட் செல்லும் இயக்குநர்கள் அங்கிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களை வைத்தே பணியாற்றுவார்கள். ஆனால் அட்லீயோ முழுக்க முழுக்க தொழில்நுட்ப கலைஞர்களை இங்கிருந்து அழைத்து சென்றார். அழைத்து சென்றது மட்டுமின்றி அவர்களிடமிருந்து சிறந்த வேலையை வாங்கியிருக்கிறார் என்றும் பலர் கூறினர். அனிருத்கூட இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி ஆகி அடுத்தடுத்து சில ஹிந்தி படங்களில் கமிட்டாகியிருப்பதாக ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மெகா வசூல்: ஷாருக்கானின் நடிப்பில் ஜவானுக்கு முன்னதாக வெளியான பதான் படம் ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்தது. எனவே இந்தப் படமும் ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்க வேண்டும் என ஷாருக்கின் ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக உலகம் முழுவதும் 1125 கோடி ரூபாயை ஜவான் படம் வசூலித்திருக்கிறது. இது வேறு எந்த இந்திய படமும் செய்யாத சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. ஜவான் படத்தின் வெற்றி காரணமாக உற்சாகமடைந்த ஷாருக் மீண்டும் அட்லியுடன் இணைந்து படம் செய்யலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்களாம்.

தமிழ்நாட்டில் டல்தான்: வசூல் ரீதியாக ஜவான் படம் சிக்சர் அடித்தாலும் விமர்சன ரீதியாக அவுட் ஆனது. அதிலும் தமிழ் ரசிகர்கள் ஜவான் படத்தை கழுவி கழுவி ஊற்றினார்கள். எப்போதும் வேறு படங்களிலிருந்து அட்லீ காப்பி அடிப்பார் ஆனால் இதில் தன்னுடைய முந்தைய படங்களிலிருந்தே காப்பி அடித்திருக்கிறார் என்ற விமர்சனங்களும் எழுந்தன. இருந்தாலும் அவருக்கு ஹிந்தியில் வாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது. இப்போது பேபி ஜான் என்ற படத்தையும் தயாரித்துவருகிறார். அது தெறி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த படம்: சூழல் இப்படி இருக்க அட்லீ அடுத்ததாக சல்மான் கானையும், கமல் ஹாசனையும் வைத்து ஒரு படத்தை இயக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் படம் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறது. அதாவது இந்தப் படத்துக்காக கமல் ஹாசனுக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும்; அதனால்தான் அவர் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார் என்றும் குரல்கள் கேட்கின்றன. ஆனால் இதில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. கமல் இப்போது தக்லைஃப் படத்தில் நடித்துவருகிறார். சல்மான் கான் முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X