பிளாக் அண்ட் பிளாக்கில் செம ஸ்டைலிஷ் போஸ்.. கமல்ஹாசனின் புதிய அவதாரம்..வியந்து போன ரசிகர்கள்!

சென்னை : திரைப்படங்களில் அசர வைக்கும் புதிய அவதாரங்களை எடுப்பதில்லை கமல்ஹாசனுக்கு நிகர் கமல்ஹாசனே.

Recommended Video

Suchithra பகீர் சம்பவம் நள்ளிரவில் அலறியடித்து ஓடிய சுச்சி

எந்த ஒரு அவதாரமாக இருந்தாலும் அதில் நேர்த்தியாக இருக்கும் கமல்ஹாசன் இன்று வரை பல அவதாரங்களை எடுத்து தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாமல் இந்திய ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

அந்தவகையில் இளமைத் ததும்ப பிளாக் அண்ட் பிளாக் உடையில் இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் வெளியாகியுள்ள ஆழ்வார்பேட்ட ஆண்டவரின் இந்த மாஸ் பிக் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வைரலாகி வருகிறது.

உலக நாயகன்

உலக நாயகன்

தமிழ் சினிமாவில் கமல்ஹாசனின் பங்கு என்பது கணக்கில் அடங்காதது. சினிமாவில் எந்த எந்த துறை இருக்கிறதோ அனைத்தையும் கரைத்து குடித்து சகலகலா வல்லவனாக வலம் வந்து கொண்டிருக்கும் கமல்ஹாசன் உலக அளவில் பல முறை தமிழ் சினிமாவை தலை நிமிர வைத்த பல திரைப்படங்களை இயக்கியும் நடித்தும் உலக நாயகனாக இருந்து வருகிறார்.

மிரட்டும் இந்தியன் தாத்தாவாக

மிரட்டும் இந்தியன் தாத்தாவாக

விஸ்வரூபம் 2க்கு பிறகு இப்பொழுது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், அதில் மீண்டும் மிரட்டும் இந்தியன் தாத்தாவாக மறு அவதாரம் எடுத்து துவம்சம் செய்ய உள்ளார்.

புதிய படம்

புதிய படம்

இந்தியன் 2 திரைப்படத்தைப் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வரும் அதே சமயம் இப்பொழுது, கோலிவுட்டில் இளம் இயக்குனர்களில் நம்பிக்கைக்குரிய இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார்.

மாஸ்டர் திரைப்படம்

மாஸ்டர் திரைப்படம்

லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதைத்தொடர்ந்து கமல்ஹாசனுடன் இவர் முதல்முறையாக இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் அவரைப் பற்றி பல மேடைகளில் பூரித்து கூறிவரும் நிலையில் இப்பொழுது ஒரு ரசிகனே நடிகரை இயக்கும் இந்த படத்தை கோலிவுட் ரசிகர்கள் மிக விரைவில் கொண்டாட காத்துக் கொண்டிருக்கின்றனர்.

துடுக்குத்தனமான பேச்சு

துடுக்குத்தனமான பேச்சு

இவ்வாறு அடுத்தடுத்த திரைப்படங்களின் மூலம் அசால்ட் செய்ய காத்திருக்கும் ஆழ்வார்பேட்ட ஆண்டவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது துடுக்குத்தனமான பேச்சின் மூலம் தொடர்ந்து நான்காவது சீசனை வெற்றிகரமாக தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் அதே சமயம் அதில் விதவிதமான புதுப்புது கெட்டப்பில் வந்து கலக்கி வருகிறார் அதில் ஒன்று இப்போது இருக்கும் சால்ட் அண்ட் பெப்பர் முறுக்கு மீசையும் தாடியும்.

சால்ட் அண்ட் பெப்பர் முறுக்கு மீசை

சால்ட் அண்ட் பெப்பர் முறுக்கு மீசை

சால்ட் அண்ட் பெப்பர் முறுக்கு மீசையும் தாடியுடன் பிளாக் அண்ட் பிளாக் டிரஸ்ஸில் சிங்கம் போல கர்ஜித்து கொண்டு செம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்திருக்கும் கமல்ஹாசனின் இந்த மரண மாஸ் போட்டோஷூட் பிக் இணையதளத்தை துவம்சம் செய்து வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X