தளபதி அய்யாவோட கால்ஷீட் கிடைச்சா.. விக்ரம் பிரஸ்மீட் விழாவில் கமல் செய்த சிறப்பான சம்பவம்!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் என மூன்று பவர்ஃபுல்லான நடிகர்கள் நடித்துள்ள விக்ரம் படத்தில் சிறப்பு இணைப்பாக சூர்யாவும் இணைந்துள்ளது தமிழ் சினிமா ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

சூர்யா ரசிகர்கள் ஜூன் 3ம் தேதி வெளியாகப் போவது சூர்யாவின் படமாக நினைத்தே கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஜய்யுடன் எப்போ படம் பண்ணப் போறீங்க என கமலிடம் பிரஸ் மீட்டில் கேட்கப் பட்ட கேள்விக்கு அவர் சொல்லியிருக்கும் பெருந்தன்மை மிக்க பதில் விஜய் ரசிகர்களையும் வியக்க வைத்திருக்கிறது.

எகிறிய ஹைப்

எகிறிய ஹைப்

விஸ்வரூபம் 2 தோல்விக்கு பிறகு கமல் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன் 2 திரைப்படம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3ம் தேதி அதிகாலை 4 மணி முதல் திரையரங்குகளில் ரசிகர்களுக்காக காட்சித் தர காத்திருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

வெறியேற்றும் கமல்

வெறியேற்றும் கமல்

ரசிகர்களுக்கு மேலும், எதிர்பார்ப்பை கூட்டும் வகையில் இந்த வயதிலும் அல்லும் பகலும் பாராமல் ஒவ்வொரு ஊருக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று பெரியளவிலான புரமோஷன்களை நிகழ்த்தி மேலும் வெறியேற்றி வருகிறார் கமல்ஹாசன். சூர்யாவின் கடைசி நேர இணைப்பும் படத்திற்கு மிகப்பெரிய அளவில் புரமோஷன் மெட்டீரியலாக மாறி உள்ளது.

விக்ரம் 3ல் சூர்யா

விக்ரம் 3ல் சூர்யா

விக்ரம் படத்தின் இரண்டாம் பாகமாகவே இந்த படம் உருவாகப் போவது கமல் அளித்த பேட்டிகள் மற்றும் டீ ஏஜிங் டெக்னாலஜி மூலம் உறுதி ஆகி உள்ளது. விக்ரம் படத்தில் கடைசி நேரத்தில் இணைந்த சூர்யாவை வைத்து தனியாகவே விக்ரம் 3 படத்தை உருவாக்கப் போகும் திட்டத்தையும் கமல் அறிவித்து வருகிறார்.

விஜய்யை வைத்து

விஜய்யை வைத்து

கமல்ஹாசன் மற்றும் சூர்யா இணைந்து பணியாற்றி உள்ள நிலையில், அடுத்ததாக விஜய்யை வைத்து எப்போ படம் பண்ணுவீங்க என்றும் தளபதி உடன் இணைந்து நடிக்க வாய்ப்பு இருக்கா என கமலிடம் ரசிகர்கள் சமீபத்தில் நடந்த பிரஸ் மீட் நிகழ்ச்சியில் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

தளபதி அய்யா

ரசிகர்களின் கேள்விக்கு அதிரடியாக "தளபதி அய்யா கால்ஷீட் கொடுத்தா நிச்சயம் அவருடன் இணைந்து படம் பண்ண தயார்" என கமல்ஹாசன் அந்த மேடையில் பேசியது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும், ரசிகர்கள் அன்போடு அழைக்கும் தளபதி என்கிற அடை மொழியுடன் அய்யாவையும் சேர்த்து கமல் பேசியுள்ள நிலையில், அவரது பெருந்தன்மையை விஜய் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

விஜய் படத்தை தயாரிக்க

விஜய் படத்தை தயாரிக்க

ராஜ் கமல் நிறுவனத்தில் ஏகப்பட்ட புதிய படங்களை தயாரிக்க கமல்ஹாசன் முனைப்பு காட்டி வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தை தயாரிக்கவுள்ள கமல் அடுத்ததாக சூர்யாவின் படத்தை தயாரிக்க உள்ளார். மேலும், நடிகர் விஜய் உடனும் தங்களது பேனரில் புதிய படம் ஒன்றில் நடிக்க பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X